மாவட்டம்

உலக சிக்கன நாள் விழாவை முன்னிட்டு கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வெ.அன்புச்செல்வன் போட்டிகளில் வெற்றிப்பெற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்குபாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்

Rate this post

கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் உலக சிக்கன நாள் விழாவை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றிப்பெற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கு  மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வெ.அன்புச்செல்வன், இ.ஆ.ப., அவர்கள் பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை இன்று (11.02.2019) வழங்கினார்.

கடலூர் மாவட்டம் 2017-18-ம் ஆண்டு சிறுசேமிப்பு வசூலில் மாவட்ட அளவில் அதிக தொகை வசூல் செய்த நிலை முகவர்கள் (ளுளுயு) மற்றும் மகளிர் முகவர்களுக்கு பரிசுத்தொகைக்கான தேசிய சேமிப்பு பத்திரம் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

மேலும் 2018-19-ம் ஆண்டு மாவட்ட அளவில் நடைபெற்ற உலக சிக்கன நாள் தொடர்பான பல்வேறு போட்டிகள் மாவட்ட அளவில் பள்ளி மாணவ மாணவியர்களிடையே நடத்தப்பட்டது. இப்போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிப்பெற்ற மாணவ மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வெ.அன்புச்செல்வன், இ.ஆ.ப., அவர்கள் பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ஆர்.ராஜகிருபாகரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி.சந்தோஷினி சந்திரா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சிறுசேமிப்பு) திரு.ஆர்.கோபாலகிருஷ்ன், உதவி திட்ட அலுவலர் திரு.பாபு விநாயகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Comment here