உலக தமிழர் பொருளாதார மாநாடு –  புதுச்சேரியில் மூன்று நாட்கள் நடைபெறுகிறது

Rate this post

 

ஐந்தாவது உலக தமிழர் பொருளாதார மாநாடு புதுச்சேரி மாநிலம் கோரிமேரி அருகே உள்ள சங்கமித்ரா என்ற் மண்டபத்தில் அக்டோபர் 12 ந் தேதி முதல் 14 ம் தேதி  வரை நடைபெருகிறது. தொழிலதிபர்கள், வர்த்தகர்கள், தொழ்லி புரியவிரும்புகிறவர்கள்,சுய வேலை வாய்ப்பு வைப்பில் ஈடுபடுபவர்கள், இளைஞர்கள், தொழில் துறையில் சாதித்தவர்கள், ஆகியோர் சந்திப்புக்கு வாய்ப்பு எற்படுத்தி கொடுக்கும் வகையில் இந்த மாநாடு நடைபெறுகிறது .

 

இந்த மாநாட்டில் கயானா நாட்டு பிரதம அமைச்சர் வீராசாமி நாகமுத்து, மொரிஷியஸ் குடியரசு தலைவர் பரமசிவம்பிள்ளை ,வையாபுரி, புதுச்சேரி முதலமைச்சர் நாரயணசாமி,, தமிழக அமைச்சர் பாண்டியராஜன், சென்னை பாரத் பல்கலைக்கழக வேந்தர் ஜெகத்ரட்சகன், வேலூர் வி.ஐ.டி பல்கலைக்கழக வேந்தர் விஸ்வநாதன் உள்ளிட்டவர்கள்  கலந்துகொள்கின்றனர் . பொருளாதார வளர்ச்சியை எட்ட,  பல்வேறு நாடுகளில்  உள்ள வேலை வாய்ப்புகள்,விருப்ப தொழில், புரிய வாய்ப்புகளை வகுத்தளித்தல் பொன்ற்வைகளும்இம்மாநாட்டின் முக்கிய அம்சமாக இருக்கும்.இறுதி நாளில் உலக தமிழர் மாமணி  விருது 12 பேருக்குவழஙபட உள்ளது. விழாவிற்க்கான எர்பாடுகளை மாநாட்டு அமைப்பாளர் சம்பத் செய்துவருகிறார்  .   

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*