உலக புகழ் டைம் வார இதழ் ரூ1,395 கோடிக்கு விற்பனை

Rate this post

அமெரிக்காவின் டைம் வார இதழை சேல்ஸ்போர்ஸ் நிறுவனத்திடம் இருந்து மார்க்பெனிஆப் என்பவர் 1, 395 கோடி ரூபாய்க்கு விலைக்கு வாங்கியுள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த டைம் வார இதழ் கடந்த 1923-ம் ஆண்டு ஹென்றி லூஸ் என்பவரால் தொடங்கப்பட்டது. இதன் ஐரோப்பிய பதிப்பகம் லண்டனில் இருந்து பிரசுரமாகி வருகிறது. மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்கா, லத்தின் அமெரிக்கா நாடுகளில் கடந்த 2003ம் ஆண்டில் இருந்து அச்சாகிறது. ஆசியப் பதிப்பு ஹாங்காங்கை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. தெற்கு பசிபிக் பதிப்பு சிட்னியை தலைமையிடமாகக் கொண்டும் இயங்குகிறது. ஏறக்குறைய உலகம் முழுவதிலும் 50 நாடுகளில் டைம் ஏடு அச்சாகிறது. உலகப்புகழ் பெற்ற டைம் வாரஇதழ் மெரிடித் கார்பிடம் இருந்து பெரும் கோடீஸ்வரரான சேல்ஸ்போர்ஸ் நிறுவனத்தின் தலைவர் மார்க் பெனிஆப், அவரின் மனைவி லினியும் 1,395 கோடி ரூபாய்க்கு விலைக்கு வாங்கியுள்ளனர். உலகிலேயே மிக அதிகமான விற்பனையாகும் வார இதழுக்கு சுமார் 2 கோடியே 60 லட்சம் வாசகர்கள் உள்ளனர்.

டைம் வாரஇதழை விலைக்கு வாங்கிய கோடீஸ்வரர் மார்க் பெனிஆப் இதுகுறித்து கூறுகையில்,நானும் எனது மனைவியும் டைம் வார இதழில் முதலீடுசெய்திருக்கிறோம். இந்த நிறுவனம் உலகளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய இதழ், வலிமையான வர்த்தகத்துக்கும் நம்பிக்கையானது.அதன்காரணமாகவே என் குடும்பத்தார் இதில் முதலீடு செய்தனர். ஆனால்,டைம் வார ஏட்டின் அன்றாட பணிகளிலோ, ஆசிரியர் குழுவிலோ எங்களின் தாக்கம் தலையீடு இருக்காது என்று தெரிவித்தனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*