உள்ளூர் வணிகர்களை ஆதரியுங்கள்.

Rate this post
                                                                                                     மக்களே
உள்ளூர் வணிகர்களை ஆதரியுங்கள்..!
திருவாரூர் மாவட்ட மக்களான உங்களை நம்பியே பாரம்பரியமாக பல ஆண்டுகளாக திருவாரூர் மாவட்டத்தில் கடை வைத்து நடத்தி வரும் நம்ம ஊர் ஜவுளிக்கடைகள், உணவகங்கள், பாத்திரக்கடை, எலக்ட்ரானிக்ஸ், ஹோம் அப்ளையன்ஸ் உள்ளிட்ட கடைகளுக்கு நேரில் சென்று தீபாவளி பர்சேஸ் செய்து உள்ளூர் வணிகர்களை ஆதரியுங்கள்!
சாலையோர சிறு குறு வியாபாரிகளிடம் சிறு தொகைக்காவது பொருட்களை வாங்கி அவர்களுக்கு வாழ்வளியுங்கள்!
கோஆப்டெக்ஸ் சென்று ஒரிரு கைத்தறி ஆடைகளையாவது வாங்கி நெசவாளர்களை வாழ வையுங்கள்!
பிரமாண்ட கடை கண்டு வியந்து தேவையில்லாமல் அடிக்கடி மொபைல் போன் வாங்க வேண்டாம்!
சம்பாதித்த காசை நல்ல வழியில் செலவழிக்க உள்ளூர் கடைகளுக்கு சென்றால் தான் இயலும்.
அமேசான், பிலிப்கார்டில் ஆன்லைனில் விலை குறைவு என சொல்லாதீர்கள்..!
ஒரு பொருள் வாங்க முயன்று அவர்கள் விளம்பர வலையில் வீழ்ந்து கையில் இருக்கும் பணத்துக்கு மேல் தேவையற்ற பொருட்களை வாங்கி கடனாளி ஆனவர்கள் அதிகம்.
ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் பழக்கத்துக்கு அடிமையாக வேண்டாம்!
ஆன்லைனில் நீங்கள் பொருட்கள் வாங்குவது யாரை வாழ வைக்கிறது என உணருங்கள்.

உறவுகளை போற்றி, நலம் விசாரித்து, கைராசியோடு பொருட்களை விற்பனை செய்யும் உள்ளூர் கடைகளில் பொருட்கள் வாங்குவது நம்மூர் மக்களை வாழ வைக்கும்.
வெள்ள நிவாரண நிதி, திருவிழா நன்கொடை, திருப்பணிகளுக்கு நன்கொடை, அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் நிதி், இல்ல விழாக்களில் கலந்து கொண்டு வாழ்த்துவது உள்ளூர் வணிகர்கள் தானே!
உள்ளூர் வணிக நிறுவனங்களில் வேலை பார்ப்போர் அனைவரும் நம் உடன்பிறவா சகோதர சகோதரிகள் அல்லவா?
எனவே, அன்பார்ந்த திருவாரூர் மாவட்ட மக்களே, வரும் தீபாவளிக்கு துணிமணிகள், இனிப்புகள், வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்டவைகளை உள்ளூர் வணிகர்களின் கடைகளில் வாங்கி .ஆதரவு தர அன்போடு வேண்டுகிறேன்.

அன்புடன்
அரு. லெட்சுமணன்
வர்த்தக சங்கம்
திருத்துறைபூண்டி

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*