உலகம்

உழைப்பே உயர்வுக்கு வழி

Rate this post

“உழைப்பே உயர்வுக்கு வழி”. யாருடைய உயர்வுக்கு என்பதை மார்க்ஸ், எங்கல்ஸ் கிழித்து தொங்க விட்டார்கள். அதுவரை உழைப்பைப் புனிதப்படுத்த்தி விசுவாசம் என்கிற பெயரில் உழைப்பாளர்களை சுரண்டி கொழுத்து வாழ்ந்து வந்த வர்க்கத்திற்கு எச்சரிக்கை விடுத்தது தொழிலாளர் வர்க்கம். “எங்கள் உழைப்பு தான் உங்களை வாழ வைக்கிறது! உங்களால் நாங்கள் வாழவில்லை! உழைக்கும் கரங்கள் ஒன்றுபட்டால் எங்களைச் சுரண்டி வாழும் அந்த கைகள் மண்ணைக் கவ்வும்” என்று முழங்கியது!

பாட்டாளி வர்க்க விடுதலைக்கான தத்துவ வழிகாட்டுதலோடு, பொதுவுடைமைக் கட்சிகளின் நடைமுறை வழிகாட்டுதலோடு தொழிலாளர்கள் தம் இன்னுயிர் தியாகம் செய்து, தம் வர்க்கத்திற்காக பல உரிமைகளைப் பெற்றுத் தந்தனர்.

இந்த நாள் எமக்கான நாள்.. நமக்கான நாள்.. நம் சக்தியை, சாதனைகளை நினைவுபடுத்தும் நாள்.

அடையாள அரசியலுக்கு பலி ஆகாமல் உழைக்கும் வர்க்கமாக ஒன்றுபட்டால் அடையக் கூடிய பொன்னுலகம் எப்படிப்பட்டது என்பதை தொழிலாளர்களுக்கு எடுத்துச் சொல்லி நம்பிக்கை ஊட்டும் நாள்.

தொழிலாளர்கள் எமக்கு தேவை கருனையோ, கூலி உயர்வோ,சலுகைகளோ, கிள்ளிக் கொடுக்கும் நலத் திட்டங்களோ அல்ல… எமக்குத் தேவை எம் உழைப்பின் முழு பலன்! எமக்குத் தேவை உழைப்புச் சுரண்டலில் இருந்து விடுதலை!

உழைப்பின் பலன் உழைப்பவருக்கும்! சமூகத்திற்குமே! மூலதனம் என்கிற பெயரில் உழைக்காமல் வாழும் வர்க்கத்திற்கு அல்ல!

ஒருவர் எல்லாருக்காகவும்! எல்லாரும் ஒருவருக்காவும் வாழக் கூடிய சுயநலமற்ற வாழ்வை உறுதி செய்யக் கூடியது பொதுவுடைமை உற்பத்தி முறையும், உழைப்பு உறவுகளும்! அதற்காக செங்குருதியால் பறந்த கொடிகள் ஏந்தி போராடுவோம்!

அதில் பின்னடைவுகள், வீழ்ச்சிகள், துரோகங்கள், குழப்பங்கள், தவறுகள் எல்லாம் நடக்கும்… ஆனால் மனதில் உறுதியும், எண்ணத்தில் தெளிவும், தத்துவ நேர்மையும் இருந்தால் இன்றல்லது நாளை… பொன்னுலகம் நம் கையில்!

வாழ்க பொதுவுடைமை சிந்தனை! வாழ்க உண்மையான சமத்துவ சிந்தனையும், வழிகாட்டியுமான மார்க்சியம்!

உலகெங்கும் வளர்க பொதுவுடைமை இயக்கம்! நிகழட்டும் உழைப்பாளர் ஒற்றுமை! வெல்லட்டும் உழைப்பாளர்கள் வர்க்கம்

உழைப்பாளர் தின வாழ்த்துகள்

Comment here