சினிமா

எங்களது திருமணத்தை வெளியிட்டு அதிக பணம் சம்பாதித்து விட்டார்கள்…. – ரவீந்தர் வேதனை

Rate this post

புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் சமீபத்தில் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்டார்.

இவர் திருமணம் குறித்து சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். ஆனால், இவர்களின் திருமணத்திற்கு பலர் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வந்தனர்.

இந்நிலையில், திருமணத்திற்கு பின் திருச்செந்தூர் முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், நடிகை மகாலட்சுமி ஆகியோர் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு இன்று காலை வந்தனர்.

அப்போது, ரவீந்தர் சந்திரசேகர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஒரு திருமணம் இவ்வளவு பரபரப்பாக பேசப் பட்டது எனக்கே அதிர்ச்சியாக உள்ளது. திருமணம் இவ்வளவு பிரபல்யம் ஆக வேண்டிய அவசியம் இல்லை.

எங்கள் திருமணத்திற்கு முன்பு தமிழ் திரையுலகில் பிரபலத்தின் திருமணத்தை ஒளிபரப்பிய நிறுவனம் அதில் பெறாத வருமானத்தை எங்களது திருமணத்தை வெளியிட்டு பெற்றது என்பது ஒரு வித்தியாசமான செயல்.

நாங்கள் செல்லும் இடங்களில் எல்லாம் எங்களுக்கு வாழ்த்து கிடைப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. நாங்கள் ஹனிமூனுக்கு தனித்தீவுக்கு செல்வதாக சொல்வதெல்லாம் வெறும் வதந்தி” என்றார்.

Comment here