விளையாட்டு

எங்களுடன் விளையாடுமாறு இந்தியாவிடம் கெஞ்ச முடியாது

Rate this post

இஸ்லாமாபாத்,

நடப்பு உலகக்கோப்பை தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இந்த நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் இஷன் மனி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது, அவர், “எங்களுடன் கிரிக்கெட் விளையாடுங்கள் என இந்தியா உள்பட எந்த ஒரு நாட்டுடனும் கெஞ்சிக்கொண்டு இருக்க முடியாது. கண்ணியமான முறையில், இந்தியாவுடனான இரு தரப்பு கிரிக்கெட் உறவுகள் மீண்டும் நடைபெற வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம்.” என்றார்.

2013-ம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவும் பாகிஸ்தானும் நேரடியாக இருதரப்பு போட்டிகளில் பங்கேற்கவில்லை. எனினும், சர்வதேச தொடர்களில் இரு அணிகளும் அவ்வப்போது மோதியுள்ளன.

Comment here