எங்க வழக்கை சீக்கீரமா விசாரிங்க! – தினகரன் தரப்பு வலியுறுத்தல்

Rate this post

தகுதி நீக்க வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற பதிவாளரிடம் 18 எம்எல்ஏக்களின் தரப்பு வழக்கறிஞர் மனு அளித்துள்ளார்.

தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, மற்றும் நீதிபதி சுந்தர் ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். அதனால் வழக்கை மூன்றாவது நீதிபதியாக விமலா விசாரிப்பார் என அறிவிக்கப்பட்டது.

அதில் வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி தங்க தமிழ்ச்செல்வன் தவிர்த்து 17 பேர் தொடர்ந்த வழக்கில் மூன்றாவது நீதிபதியாக சத்யநாராயணன் விசாரிப்பார் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இந்நிலையில் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என 18 பேரின் சார்பில் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் உயர்நீதிமன்ற பதிவாளரிடம் மனு அளித்துள்ளார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் 18 தொகுதிகளும் எம்எல்ஏக்கள் இன்றி உள்ளதால் பொதுமக்கள் நலன் கருதி வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த தீர்ப்பு எம்.எல்.ஏக்களுக்கு சாதகமாக வரும் என்றும் அவ்வாறு வந்தால் விரைவில் எடப்பாடி பழனிச்சாமி அரசு கவிழும் என தங்க தமிழ்செல்வன் சமீபத்தில் பேட்டியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*