Sliderஉலகம்

எட்டயபுரத்தில் உள்ள ஒரு தாய் மட்டுமே தன் கருவில் நெருப்பைச் சுமர்ந்தாள்.

Rate this post


“உலகில் உள்ள அனைத்து பெண்களும் கருவில் தன் குழந்தையை சுமக்கும் போது, எட்டயபுரத்தில் உள்ள ஒரு தாய் மட்டுமே தன் கருவில் நெருப்பைச் சுமர்ந்தாள். ஆகவே பாரதி பிறந்தான் ” என்று பேசிய தோழர் டி.எஸ்.ஆர.சுபாஷ்

மலேசியாவில் இன்று நடந்த மகாகவி பாரதியார் அவர்களின் பிறந்தநாள் விழா !

இன்று காலை 10 மணியளவில் மகாகவி பாரதியார் அவர்களின் பிறந்தநாள் விழா கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கத் தலைவர் தோழர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் இந்தியா, துபாய், சிங்கப்பூர், உட்பட பல நாடுகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு பாரதியின் புகழ் பாடினர்.

இந்த விழா மலேசியா நாட்டில் உள்ள ஜோஹர் பாரு பகுதியில் அமைந்துள்ள ஜாலான் யாஹ்யா அவாள் தமிழ் பள்ளியில் திருவள்ளுவர் மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் தலைமை விருந்தினர்களாக உயர்திரு.Y.B.வித்யானந்தன்* (Johor State MIC Chairman, The State Assemblyman Kahang)

உயர்திரு.M.H.மகரிஷி.பரஹம்ஷா சங்கரந்தசுவாமி தீர்த்தர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

திருமதி.டாக்டர்.சித்ரா ராஜேந்திரன் (Ambassador for Family Peace. Founder&CEO Mind Next org. Additional DG NCIB. Woman’s Wing President Social Protection Org)

டி.யூ.ஜே மாநில நிர்வாகி தினமலர் ” கே.ரமேஷ்குமார் ( தேசியக் குழு உறுப்பினர் – அகில இந்திய பத்திரிகையாளர் சங்கம் – புது டில்லி ) உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்வில் ஸ்ரீ ருத்ராக்ஷா நடன (ம) இசைப்பள்ளியின் தமிழர் கலை பாராம்பரிய நடன நிகழ்ச்சிகள், மற்றும் பாரதியின் பாடல்கள் அனைவரையும் கவர்ந்தது.

இந்த விழாவினை Social protection தலைவர் ஜோசப் இளந்தென்றல் , National co-ordinator கார்த்திக் குமார் அவர்களோடு இணைந்து மலேசிய ஆன்மீக சங்க தலைவர் Social protection மலேசியா தலைவர் தீரன் ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.


Comment here