எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூபாய் 20 ஆயிரம் மதிப்பிலான  நிவாரண பொருட்கள்  வழங்கினார்

Rate this post
எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் தனது சகோதரியுடன் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூபாய் 20 ஆயிரம் மதிப்பிலான  நிவாரண பொருட்கள்  வழங்கினார்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்துள்ள மொளச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் யுவராஜ் இவரது மகன்     இஷாந்த்.     அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவருடன்  அவரது சகோதரியும் அதே பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இவர்கள் இருவரும் சேர்ந்து கஜா புயலால்        பாதிக்கப்பட்டவர்களுக்கு, பொதுமக்களிடம்   நிவாரண நிதி யாக    ரூபாய் 8000 ரொக்கப்பணம் உள்பட 20 ஆயிரம் மதிப்புள்ள நிவாரணப் பொருட்களை சேகரித்து, தனது பெற்றோருடன்,     காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தில்  மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா  அவர்களிடம்      வழங்கினார்கள். இது எடுத்து மாவட்ட ஆட்சியர் மாணவரை வெகுவாக பாராட்டினார்
பேட்டி.   இஷாந்த்   (பள்ளி மாணவன்)
https://www.youtube.com/watch?v=_eieQwDDtl8

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*