சம்பவம்

என்கவுண்டரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை

Rate this post

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீரின் பட்காம் மாவட்டத்தில் உள்ள க்ரல் போரா செக்போரா பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில், குறிப்பிட்ட இடத்தை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர்.

பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்த போது, மறைந்து இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். உடனே சுதாரித்துக்கொண்ட பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர்.

இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற இந்த துப்பாக்கிச்சண்டையில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான்.
சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதியின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை. என்கவுண்டர் நடைபெற்ற இடத்தில் இருந்து வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Comment here