ஆன்மிகம்

என்ன ஹோமம் செய்கிறோம்?

அதாவது எந்த தெய்வத்தை நினைத்து செய்கிறோமோ, அந்த
தெய்வத்தை கும்பத்தில் நிலை நிறுத்துவதுதான்
ஆஹாவனம் என்று பெயர்.

அடுத்து செய்யப்படுவது நவக்கிரக தோஷ பரிகாராம்.

ஜெனனி ஜென்ம சௌக்கியனாம்
வர்த்தினி குல சம்பதாம் பதவிபூர்வ புண்ணியனாம் லிக்கியதே ஜென்மபத்திரிகா என்பது ஜோதிடவாக்கு.

நம் வாழ்க்கையில் நடக்கும் நல்லது கெட்டது
அனைத்திற்கும் காரணம் நவகிரகங்கள்.
நம்புகிறமோ இல்லையோ, ஏற்றுக் கொள்கிறோமோ
இல்லையோ, அவர்கள் தங்கள் பணியை செய்கிறார்கள்.

இதைதான் வாங்கி வந்த வரம் என்கிறார்கள்.
இவர்கள் நம் வாழ்க்கையில் புகுந்து விளையாடுவதால் தான்
நாம் பரிகாரம் செய்கிறோம்.
அதனால் நவகிரங்களை வணங்கி பூஜிக்க வேண்டும்.

இதை ஹோம நிறைவுக்கு முன் செய்வதும் உண்டு.

இனி ஹோமம் ஆரம்பம்

இந்த நடைபெறும் போதுதான் வேத பாராயணங்கள்
செய்யப்படுகிறது.

வேத பாராயணங்கள் என்பது இறைவனை ஆராதிப்பது
என்று பொருள்.

பொதுவாக பாராயணங்கள் என்பதே இறைவனை புகழ்ந்து
பாடி, அவர் அருளை பெறுவதுதான்.

ஒவ்வொரு தெய்வத்திற்கும் மூலமந்திரம், வேதமந்திரம்,
காயத்திரி மந்திரம், பிராத்தனை மந்திரம் என்ற நான்கு
உண்டு.

உதாரணமாக மூல மந்திரம் என்பது பீஜாச்சரம் கொண்டு
சொல்வது.

அது ஓம் ஸ்ரீம் ரீம் என்று வரும்.
வேத மந்திரம் என்பது
ஒலி அலைகளால் நன்மை பெறுவது.

காயத்திரி மந்திரம் என்பது எந்த தெய்வத்தை நோக்கி
ஹோமம் செய்கிறோமோ அவரின் புகழுரைகளை சொல்வது.

பிராத்தனை மந்திரம் என்பது நம் வேண்டுதல் பலிப்பதர்க்காக
சிரம் தாழ்த்தி, கை கூப்பி, மனதார பிராத்திப்பது என்று
பொருள்.

பாராயண முடிவில் சமகம் சொல்லப்படுகிறது.

வசுவதாரா கொண்டு நெய் ஊற்றும் போது சொல்லப்படும்
மந்திரம் சமகம்.

 

Comment here