விளையாட்டு

‘‘எப்படி இருக்கீங்க; நல்லா இருக்கேன்” – இணையத்தில் வைரலாகும் தோனி மகள் பேச்சு

Rate this post
ஐ.பி.எல். வந்துவிட்டாலே தோனி வைரலாவதைவிட அவரது மகள் ஸிவா அதிகம்  வைரலாவார். ஸிவா எது செய்தாலும் அது வீடியோவாக வெளிவந்து செம வைரலாகும். தோனியை பின்தொடருபவர்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்களோ அதற்கு இணையாக ஸிவாவுக்கும் சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருபவர்கள்  இருக்கிறார்கள்.
கடந்த ஐ.பி.எல். தொடரில் அப்படிதான் ஸிவா என்ன செய்தாலும் வீடியோவாக வெளியாகி செம வைரலானது. இந்த வருடமும் அது தொடங்கியுள்ளது. தோனி கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் ஸிவாவின் வீடியோ நேற்று சமூக வலைதளம் முழுவதும் வைரலாகியுள்ளது.
‘எப்படி இருக்கீங்க’ என்று தோனி ஆறு மொழிகளில் கேட்கிறார். அதற்கு ஏற்றார்போல ஸிவா அந்தந்த மொழிகளில் பதில் சொல்கிறார். தமிழில்  ‘எப்படி இருக்கீங்க’ என்று தோனி கேட்க அதற்கு ஸிவா,  ‘நல்லா இருக்கேன்’ என்று தன்னுடைய மழலை மொழியில் பதில் சொல்கிறார்.
அடுத்து வங்காளம், குஜராத்தி, போஜ்புரி, பஞ்சாபி ஆகிய மொழிகளிலும் எப்படி இருக்கீங்க என்று தோனி கேட்க, ஸிவா தகுந்த மொழிகளில் பதிலளித்தார். இறுதியாக தோனி  ‘இன்ஷா அல்லாஹ்’ என்று சொல்ல  ‘மாஷா அல்லாஹ்’ என்று ஸிவா பதிலளித்தார். தற்போது இந்த வீடியோவை தோனி அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யபட்டு உள்ளது.

Comment here