அரசியல்

எமர்ஜென்சி உபயோகப்படுத்த தேவையில்லை – மாஃபா.பாண்டியராஜன் பேட்டி

Rate this post

 

முதல்வரின் உத்தரவு படி டெங்குவை கட்டுபடுத்த போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஸ்டாலின் அவர்கள் எமர்ஜென்சி என்ற மிகஅழுத்தமான வார்த்தைகளை உபயோகப்படுத்த தேவையில்லை – மாஃபா.பாண்டியராஜன் பேட்டி

சென்னை அயனாவரத்தில் உள்ள சௌந்திரபாண்டியன் ஆரம்ப மேல்நிலைப் பள்ளியின் வைர விழாவை முன்னிட்டு காமராஜர்பிறந்த நாள் விழா மற்றும் பரிசளிப்பு விழா நடைப்பெற்றது – தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியியல் துறை அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்

சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையில் ஒற்றுமையின் சிலை என்று தமிழில் எழுத்துகள் தவறாக எழுதப்பட்டுள்ளதாக தவறுதலான தகவல் பரப்ப படுகிறது சிலையை பொறுத்த வரை எந்த தவறும் இல்லை என்றும்

அருகில் உள்ள மலையில்
கல்வெட்டு வடிவில்
22 மொழிகளில் எழுதப்பட்டுள்ளது. அதில் மூன்று மொழிகளில் தவறுதலாக எழுதப்பட்டதை கண்டறியப்பட்டு உடனடியாக எடுக்கப்பட்டது.

அதனை சிலர் வலைதளங்களில் பரப்பி உள்ளனர்.

அதனை மாற்றி மீண்டும் திருத்தம் செய்து வைக்கப்படும் என்றும் விளக்கம் அளித்தார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்குவுடன் சேர்ந்து பன்றிகாய்சலும் சேர்ந்து பரவி வருவதால் அதன் தாக்கம் அதிகமாக உள்ளது, மிகவிரைவில் கட்டுக்குள் கொண்டுவரப்படும்.

முதல்வரின் உத்தரவு படி டெங்குவை கட்டுபடுத்த போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஸ்டாலின் அவர்கள் எமர்ஜென்சி என்ற மிகஅழுத்தமான வார்த்தைகளை உபயோகப்படுத்த தேவையில்லை என்றும் தெரிவித்தார்.

மாணவர்களுக்கு வழங்கப்படும் பஸ் பாஸ் மற்றும் மடிகணினி இரண்டு வாரங்களுக்குள் வழங்கப்படும் கல்விதுறை அமைச்சர் அதற்கான நடவடிக்கை மேற்கொண்டுவருகிறார் எனவும் தெரிவித்தார்.

அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கியுள்ளதாகவும், மாநகராட்சி கட்டுபாட்டில் உள்ள போக்குவரத்து ஊழியர்கள் விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடைப்பெற்று வருகிறது.
அது தாமதம் ஆகும் என்பது அனைத்து தலைவர்களுக்கும் தெரியும் என்றும் தெரிவித்தார்.மிக விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் எனத்தெரிவித்தார்.

Comment here