Sex Cams / கோர்ட் / எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் மாணவர்களா? ஐகோர்ட் தடை!

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் மாணவர்களா? ஐகோர்ட் தடை!

tamilmalar on September 27, 2017 - 9:56 am in கோர்ட்
5 (100%) 1 vote

சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பாடம் நாராயணன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். அதில் ஆசிரியர்களின் போராட்டம் காரணமாக ஏற்கனவே பள்ளி மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் தற்போது எம்ஜிஆர் நூற்றாண்டு விழா போன்ற பள்ளிச் சாரா நிகழ்ச்சிக்கு மாணவர்களை அழைத்துச் செல்வதால் அவர்களது படிப்பு மேலும் பாதிப்படைகிறது. எனவே சேலத்தில் செப்டம்பர் 30ஆம் தேதி நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு மாணவ, மாணவிகளை அழைத்துச் செல்ல தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனு இன்று (செப் 27) விசாரணைக்கு வந்தபோது, “மாணவர்களை இதுபோன்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வைக்கக் கூடாது, எந்தெந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்ற விதிமுறையை வகுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது.

 

இதை ஏற்ற நீதிமன்றம், பள்ளிச் சாரா பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாணவர்களை வெளியில் அழைத்துச் செல்லத் தடை விதித்தும், சேலத்தில் செப்டம்பர் 30ஆம் தேதி நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் மாணவர்கள் பங்கேற்க தடை விதித்தும் உத்தரவிட்டுள்ளது.

இதுதவிர, பொது நிகழ்ச்சிகளுக்கு மாணவர்களை அழைத்துச் செல்வது குறித்து குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் விதிமுறைகளை வகுக்கும் வரை அவர்களை வெளியில் அழைத்துச் செல்ல இடைக்காலத் தடை விதிப்பதாகத் தெரிவித்துள்ளது

இது தொடர்பாக இரு வாரத்துக்குள் தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

0 POST COMMENT
Rate this article
5 (100%) 1 vote

Send Us A Message Here

Your email address will not be published. Required fields are marked *