இந்தியா

எல்லை விவகாரம்; நீர் கிடைக்காமல் வெப்ப தாக்குதலில் உயிரிழந்த 15 குரங்குகள்

மத்திய பிரதேச வன பகுதியில் குரங்குகளுக்கு இடையேயான எல்லை விவகாரத்தில் நீர் கிடைக்காமல் வெப்பம் தாக்கி 15 குரங்குகள் உயிரிழந்தன.

மத்திய பிரதேசத்தின் திவாஸ் நகரில் பாக்ளி பகுதியில் ஜோஷி பாபா வனப்பகுதியில் பல விலங்குகள் வசித்து வருகின்றன. கோடை காலத்தில் ஏற்பட்ட தண்ணீர் பற்றாக்குறையானது வனவிலங்குகளையும் விட்டு வைக்கவில்லை.

இதனால் போதிய நீர் கிடைக்காமல் வெப்ப தாக்குதல் ஏற்பட்டு 15 குரங்குகள் வரை வனப்பகுதியில் உயிரிழந்து விட்டன. இதுபற்றி மாவட்ட வன அதிகாரி மிஷ்ரா கூறும்பொழுது, காட்டில் 5 அல்லது 6 குழுக்களாக குரங்குகள் வசித்து வந்துள்ளன. அளவில் பெரிய குரங்குகள் நீர் நிலைகளை தங்களது கட்டுக்குள் வைத்திருக்கின்றன.

அவை மற்ற சிறிய குரங்குகளை அச்சுறுத்தி, தாக்கி விரட்டியுள்ளன. உயிரிழந்த குரங்குகளில் நடந்த பிரேத பரிசோதனையில் வெப்பம் தாக்கி இறந்தது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என அவர் கூறியுள்ளார்.

Comment here