அரசியல்

எளிதாக கடந்துவிட – முடியாது அண்ணாமலை குறித்து முக்கிய தகவலை பகிர்ந்த பானு கோம்ஸ்.

Rate this post

எளிதாக கடந்துவிட – முடியாது அண்ணாமலை குறித்து முக்கிய தகவலை பகிர்ந்த பானு கோம்ஸ்.

சமூக செயற்பாட்டாளர் பானுகோம்ஸ் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் செய்தியாளர் சந்திப்பு என்பது தரவுகளுடன் இருப்பதாகவும், உண்மையான செய்தியாளர் சந்திப்பு அர்த்தம் கிடைத்து இருப்பதாகவும், அண்ணாமலையின் ஒவ்வொரு பேட்டியும் எளிதில் கடந்துவிட முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் தெரிவித்த கருத்துக்கள் பின்வருமாறு :- சமீப காலம் வரை அரசியல் தலைவர்களின் பிரஸ் மீட் என்பதை கடந்துவிடுவதே வழக்கம். காரணம் எளிதாக கடந்துவிடும்படி தான் அவை இருந்து வந்தன, கட்சி வேறுபாடின்றி அனைத்து கட்சிகளுக்கும் இது பொருந்தும்.

அரசியல் களத்தில் திரு. அண்ணாமலையின் வரவிற்கு பின் அவர் நடத்தும் பிரஸ் மீட்கள் அனைத்தும் பிரஸ் மீட் என்பதன் உண்மையான பொருளும், பலனும் வெளிவரும் வகையில் இருக்கின்றன. அனாவசிய புகழ்ச்சிகள் இல்லை. அனாவசிய எதிர்ப்புகள் & வெறுப்புகள் இல்லை. அனாவசிய வார்த்தைகள் கூட இல்லை.

மாறாக கேட்கப்படும் கேள்விகளுக்கு மழுப்பல்கள் அற்ற நேரடியான பதில்கள். தெளிவாக மக்களுக்கு புரியும்படியான பதில்கள். மிக முக்கியமாக தரவுகளுடன் கூடிய பதில்கள் ! என்று ஒவ்வொரு பிரஸ் மீட்-ம் எளிதாக கடந்துவிட முடியாதபடியும், அவருடைய பிரஸ் மீட் என்றால் எதிர்பார்த்து கவனமுடன் கவனிக்கும்படியும் இருக்கின்றன.

ஒரு அரசியல் தலைவராக திரு.அண்ணாமலை ஏற்படுத்தி இருக்கும் இந்த ஆரோக்கியமான மாற்றம் மிகவும் வரவேற்கத்தக்க, பாராட்டத்தக்க மாற்றம் என குறிப்பிட்டுள்ளார் பானு கோம்ஸ். அண்ணாமலையின் செய்தியாளர் சந்திப்பும் அதில் கூறப்படும் தகவல்களை மையமாக கொண்டே தமிழக அரசியல் உருமாறி வருவது குறிப்பிடத்தக்கது.

Comment here