இந்தியா

எழுத்துடன் கூடிய செம்பியன்கண்டியூர் கற்க்கோடாரி

 

கீழடியில் கிடைத்தவற்றில் கரிம ஆய்வுசெய்ததில் பெற்ற 2600 ஆண்டுகள் பழமை வாய்ந்த கரி மம் கிடைத்த அதே அடுக்கில் கிடைத்த பானை ஓட்டில் கிடைத்த எழுத்துப் பொறிப்பு மூலம் தமிழி 2600 ஆண்டுகள் பழமை என்ற முடிவுக்கு வர இயன்றது .ஆனால் அதற்க்கு பல ஆண்டுகளுக்கு முன்பே கிடைத்த ஒரு சான்று மூலம் எழுதத்தெரிந்த ஒரு இனம் தமிழ் நாட்டில் வாழ்ந்த மூத்த வரலாற்றை நிறுவும் பண்டைய சான்றுகளை சற்றே மறந்து விட்டோம்
.அதுவும் கிடைத்த அந்த எழுத்துக்கள் பா னை ஓட்டில் இல்லை .பண்டைய கற் க்கோடாரியில் ஆகும் .சிந்து வெளி எழுத்தை ஒத்த எழுத்துடன் கூடிய ஒரு கற் க்கோடாரி ஒன்று தமிழ் நாட்டில் கிடைத்துள்ளது
2006ஆம்ஆண்டினதுவக்கத்தில், பள்ளி ஆசிரியரான வி. சண்முகநாதன் என்பவரால் சிந்து எழுத்துக்களை ஒத்த எழுத்துகள் பொறிக்கப்பட்ட புதியகற்கால கோடாரி (கருவி) ஒன்று அவரது தோட்டத்து வாழையை தோண்டும்போது கண்டுபிடிக்கப்பட்டது.அந்த ஊர் செம்பியன் கண்டியூர் ஆகும் செம்பியன் கண்டியூர் (Sembiyankandiyur) என்பது தமிழ்நாட்டின், நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை வட்டத்தில் காவிரி ஆற்றின் வடகரையில் குத்தாலத்திலிருந்து இரண்டு கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஒரு கிராமமாகும் இந்தக் கோடாரியானது கைகளால் செய்யப்பட்ட, வழவழப்பான கல் கோடாரியாகும், இதில் நான்கு சிந்து சமவெளி குறியீடுகள் இருந்தன. இதில் உள்ள எழுத்துகளின் காலமானது கி.மு 1500 க்கு முற்பட்டது என்றுகருதப்பட்டது இந்த நூற்றாண்டின் மிகமுக்கியமான அகழ்வாராய்ச்சி கண்டுபிடிப்பு இது” என்று உலகப்புகழ்பெற்ற தொல்பொருள் அகழ்வாராய்ச்சி நிபுணர் திரு. ஐராவதம் மகாதேவன் இந்த இரண்டு கற்களைப்பற்றியும் அப்போது கருத்து தெரிவித்துள்ளார். சிந்து சமவெளிநாகரிக எழுத்துக்கள் தமிழ்நாட்டையும் எட்டியிருந்தன என்பதுதான் நமக்குக்கிடைக்கும் புதிய செய்தி. “நான் மிக கவனமாக இந்த இரண்டு கற்களையும் ஆராய்ந்தேன். கி.மு. 1500க்கும் கி.மு.2000க்கும் இடைப்பட்ட காலத்தைச்சார்ந்ததாக இந்த கற்கள் இருக்கவேண்டும்” என்றார் திரு ஐராவதம் மகாதேவன். ஒருவேளை வட இந்தியாவில் இருந்து இந்த கற்கள் வந்திருக்கலாம் என்ற சிலரின் கூற்றை திரு ஐராவதம் மகாதேவன் உறுதியாக மறுத்தார். இந்த கற்கள் முழுக்கமுழுக்க தென்னிந்திய பாறைவகையைச்சேர்ந்தது என்றும் திரு ஐராவதம் மகாதேவன் கூறுகிறார்.

கற்களினாலான இரண்டு ஆயுதங்களில் ஒன்றில் மட்டும் எழுத்துக்குறியீடுகள் காணப்படுகின்றன. நான்கு குறியீடுகளில் முதலாவது குறியீட்டில் விலாஎலும்புகளுடன்கூடிய உடலமைப்பு காணப்படுகிறது. இரண்டாவது குறியீட்டில் ஒரு ஜாடி காணப்படுகிறது. இதைப்போன்ற நூற்றுக்கணக்கான அடையாளங்கள் ஹாரப்பாவில் காணப்படுகின்றன. திரு ஐராவதம் மகாதேவன் முதல் குறியீட்டை ‘முருகு’ எனவும் இரண்டாவது குறியீட்டை ‘அன்’ என்றும் இரண்டு குறியீடுகளும் சேர்ந்து ‘முருகன்’ என்ற சொல்லை உணர்த்துவதாக கூறுகிறார். பழந்தமிழ் செய்யுள்களில் முருகக்கடவுள் வேட்டையாடுபவராகவும், போர்க்கள கடவுளாகவும் சித்தரிக்கப்படுகிறார். மூன்றாவது குறியீடு சூலமாகவும் நான்காவது குறியீடு பிறையாகவும் காணப்படுகிறது.

அப்போதைய தமிழக தொல்லியல் துறையின் சிறப்பு ஆணையர் டி. எஸ். ஸ்ரீதரின் கூற்றுப்படியம் , இதில் நான்கு குறியீடுகள் அடையாளம் காணப்பட்டன. என்பதை உறுதி செய்திருக்கிறார் இந்தக் கண்டுபிடிப்பிற்கு முன்னர், சிந்து வெளி சித்திர எழுத்துகளானது தென்னிந்திய தீபகற்பத்தில், மகாராட்டிரத்தின் கோதாவரி சமவெளியில் பிரவர ஆற்றுப் பகுதியில் கிடைத்துள்ளன. இந்தக் கல்லானது ஒருவேளை வட இந்தியாவில் இருந்து வந்திருக்கலாம் என்ற கூற்றை திரு ஐராவதம் மகாதேவன் உறுதியாக அப்போது மறுத்தார். இந்த கற்கள் முழுக்கமுழுக்க தென்னிந்திய பாறைவகையைச்சேர்ந்தது என்றார்.இங்கேயே செய்தது இங்கேயே எழுத்து பொறிக்கப்பட்டது என்பதை உறுதி செயகிறார் .
இந்த கண்டுபிடிப்பு தொல்லியல் துறை வட்டாரங்களில் அப்போது ஒரு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு, இந்திய தொல்லியல் ஆய்வு மையம் அதே செம்பியன்கண்டியியூரில் அகழ்வு செய்ய முடிவுசெய்தது.
கற்கோடாரி கிடைத்த இடத்தில் நான்கு குழிகள் அகழப்பட்டன. அதில், வழவழப்பான களிமண்ணால் செய்யப்பட்ட சிறிய பானைகளும், வட்டில்களும், தட்டுகளும், கிண்ணங்களும், கறுப்பு, சிவப்பு நிற மட்கலன்களும், கறுப்பு நிற மட்கலன்களும், சிவப்பு மட்கலன்களும் இவற்றில் அடங்கும். மேலும், பெண்கள் விளையாடும் வட்ட வடிவ சில்லுகளும், சில எலும்புச் சிதைவுகளும் இங்கு கிடைத்தன.முழுமையாக கிடைத்த பானைகளில் மீன், டமாரு, சூரியன், நட்சத்திரம், ஸ்வஸ்திக் போன்றவை வரையப்பட்டிருந்தன. இந்த கீறல்கள் கறுப்பு, சிவப்பு நிற மட்கலன்கள், கறுப்பு நிற மட்கலன்கள ்போன்றவற்றில் வரையப்பட்டிருந்தன சில குறியீடுகள் மீண்டும் மீண்டும் இடம்பெற்றிருந்தன.ஆனால் எதிர்பார்த்தபடி வேறு கற் க்கோடாரிகள் எதுவும் கிடைக்கவில்லை .ஆனால் கிடைத்த கற் க்கோடரியில் இருந்த எழுத்துக்கள் சிந்து வெளி எழுத்துக்கள் ஒத்தவை என்பதும் ஏனோ அதிக முக்கியத்துவம் இதுவரை பெறவில்லை .ஆனால் எழுதத்தெரிந்த ஒருசமூகம் காவிரிக்கரையில் வாழ்ந்திருந்தது என்பது உண்மை ஆனால் அதை பெரிதுபடுத்தவில்லை .ஏன் என்பதும் புரியவில்லை .இவாறு வேறு எங்காவது இப்படி நடக்குமா ?

மேலும்
படிக்க விரும்புவோருக்கு

http://www.tn.gov.in/misc/Archaeological_discovery.htm
http://kalyan96.googlepages.com/Sembiyankandiyurcelttool.pdf

செம்பியன் கண்டியூர் அகழாய்வு அறிக்கை 2007- 2008 என்பதும் வெளியிடப்பட்டுவிட்டது .அதன் பதிப்புரையில் /முன்னுரையில் இந்த கற் க்கோடாரி கிடைத்த செய்தி அதில் இருந்த எழுத்துக்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது .அதன் பி டீ எப் கிடைக்கிறது .#அண்ணாமலைசுகுமாரன்
30/10/19

Comment here