ஆன்மிகம்

ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு திருவிழா!

Rate this post

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு திருவிழா ஆண்டுதோறும் தேசிய ஒருமைப்பாட்டு விழாவாக நடந்து வருகிறது. நடப்பாண்டுக்கான சந்தனக்கூடு திருவிழா இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் இந்த விழாவில் பங்கேற்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் மேள தாளங்கள் முழங்க, அலங்கரிக்கப்பட்ட யானை, நாட்டிய குதிரைகளில் சந்தன குடம் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. பின்னர், சந்தன குடத்தை, தர்கா வளாகத்திற்குள் கொண்டு வந்து சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது. இதில், ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு நடத்தினர்.

சந்தனக்கூடு திருவிழாவைக் காண, தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் சிங்கப்பூர், மலேசியா, சவூதி, பினாங்கு உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்த பொதுமக்களும் கலந்து கொண்டு வழிபாடு நிகழ்த்தினர்.

சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 12- ந்தேதி கொடி இறக்கத்துடன் விழா நிறைவு பெற உள்ளது.

Comment here