ஏர் செல் சேவை முடங்கியது!

Rate this post

செல்போன் இணைப்பு சேவையில் முக்கியப் பங்கு வகிக்கும் ஏர்செல் நிறுவனத்துக்கு நாடு முழுவதும் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்கள் உள்ளனர். குறிப்பாக, தமிழகத்தில் அதிக அளவிலான வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக ஏர்செல் இணைப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக செயலிழக்கத் தொடங்கின.

கடந்த 2 நாட்களாக பல பகுதிகளில் ஏர்செல் சேவை முற்றிலுமாக முடங்கியது. தமிழகத்தின் பல பகுதிகளிலும் ஏர்செல் சேவை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. ஏர்செல் இணைப்புகள் செயலிழந்ததால் பல்லாயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் சிரமத்துக்குள்ளாகினர்.

டவர் பிரச்சினை காரணமாக செல்போன் இணைப்புகள் கிடைப்பதில் பிரச்சினை இருப்பதாகவும், விரைவில் இந்தப் பிரச்சினை சரியாகிவிடும் எனவும் ஏர்செல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த பிரச்சினை தீருவதற்கு பதில் அதிகரித்துள்ளது. சென்னை உட்பட பல்வேறு நகரங்களிலும் இன்று 90 சதவீத அளவிற்கு சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஏர்செல் வாடிக்கையாளர்கள் எஸ்எம்எஸ் அனுப்பி வேறு நிறுவன மொபைல் சேவைக்கு மாற முயன்று வருகின்றனர். இதன்படி தங்கள் நெட்வொர்க் செட்டிங்கில் சென்று விரும்பிய நெட்வொர்க்கை தேர்வு செய்து, port என டைப் செய்து 1900 என்ற எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்பலாம்.

அதன் மூலம் கிடைக்கும் போர்டபிளிட்டி எண் கிடைக்கும். 15 நாட்களுக்கும் வேறு சேவைக்கு மாறுலாம். எனினும் இந்த சேவையை பெற முடியாமல் ஏர்செல் வாடிக்கையாளர்கள் தவிக்கின்றனர். போர்டபிளிட்டி விருப்ப எஸ்எம்எஸ் செல்லவில்லை எனவும் புகார் தெரிவிக்கின்றனர். தற்போது இது குறித்து சமூக வலைதளங்களிலும் ஏர்செல் வாடிக்கையாளர்கள் கவலையை பகிர்ந்து வருகின்றனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*