இல்லறம்

ஏழு ஞானம்

ஞானம் ! ஏழு ஞானம் !

ஞானம் அடைதலே வாழ்வின் இலக்கு என்பனர் சிலர் .
ஞானம் என்பது என்ன என்று தெரிந்தாலே அதை அடையமுடியும் .ஞானம்
என்பது எது என்பதில் பல்வேறு குழப்பம் உண்டு ! அதில் தெளித்தால் வேண்டும் .
ஆயினும் ஞானத்தில் எழுவகை உண்டு என்கிறது ஆன்மிகம் .

சுபேச்சா, விசாரணை, தனுமாநஸி, ஸத்வாபத்தி, அசம்சக்தி,
பதார்த்தபாவனை, துரீயம் என்று ஏழு படித்தரங்கள் விளக்கப்பட்டுள்ளன.

தான் அறியாமையில் இருப்பதை உணர்ந்து ஒருவன் ஞானம் அடையவேண்டும் என்று விரும்புவானாகில் அவன் ”சுபேச்சா” நிலையில் இருக்கிறான். இதுவே முதல் நிலையாகும்.

உலகின் நிலையாமையை உணர்ந்து, தன் அறியாமையை அழிக்கும் விதம்
எவ்வாறு என்று ஆராய்ந்து, ஞானத்தைக் குறித்து தீவிரமாக சிந்திப்பது
‘விசாரணை” இது இரண்டாவது நிலையாகும்.

உலகப் பொருள்களின்மீது உள்ள பற்றுகளை அகற்றி, மனமானது எப்போதும்
மெல்லிய நூல்போல தொடர்ந்து எப்போதும் ஆத்ம தியானத்தில் திளைத்திருத்தல் ”தனுமாநஸி” என்கிற மூன்றாவது நிலை

மனமானது தூய்மையடைந்து சத்துவத்தனமை அடைந்து முழுமையாக
தொடர்ந்த தியானத்தில் இருப்பது ”ஸத்வாபத்தி”. இது நான்காம் நிலை.

ஆத்மஞானத்தினால் எப்போது ஒருவன் பொருளியல் நடப்பு உலகில் இருந்து
விடுபடுகிறானோ அந்த நிலையே ”அசம்சக்தி” யாகும். இதுவே
ஐந்தாம்நிலை

தன்னைச் சுற்றி உள்ள உலகப் பொருள்கள் அனைத்தும் வெறும் ஜடப்பொருள்கள் அல்ல. உண்மையில் எல்லாம் பிரம்மமே என்று எப்போது ஒருவன் உணர்கிறானோ அந்தநிலையை ”பதார்த்தபாவனை” என்கிறார்கள். இதுதான் ஆறாவது நிலையாகும்.

உலகின் பல்வகைப்பட்ட வேற்றுமைகளை அகற்றி அகண்ட, சச்சிதானந்த பரப்பிரம்மனை உணர்பவனே ”துரியத்தில்” நிலைத்ததாகக் கருதப்படுகிறான் இதுவே ஏழாம் நிலை. இந்த நிலையே முக்தி அல்லது ஜீவன்முக்தி என்று சொல்லப் படுகிறது.

ஐந்தாம் நிலை யோகி ”பிரம்மவித்வரன்” என்றழைக்கப் படுவார்.
ஆறாம் நிலையில் உள்ளவர் ”பிரம்மவித்வரீயான்” என்றழைக்கப்படுகிறார்.
ஏழாம் நிலை ஞானி ”பிரம்மவித் வரிஷ்டன்” ஆவார்

முதல் மூன்று நிலைகள் புறத் தொடர்பு கொண்டவை அந்த நிலையில் உள்ள
சாதகனை ”முமுட்சு” என்பார்கள்

நான்காவது, ஐந்தாவது நிலையில் உள்ள ஞானிகளால் மட்டுமே
உலகநன்மைக்காக பாடுபட முடியும்

ஆறாம், ஏழாம் நிலையில் உள்ளவர்கள் உலகிற்கு தொண்டு செய்ய விரும்பினால் ஐந்த, ஆறாம் நில்க்கு இறங்கி வர வேண்டும். அது அவர்களுக்கு முடியும்
பிறகு ஏழாம் நிலைக்கும் திரும்பிச் செல்லமுடியும் .

ஒன்றும் இரண்டும் இலதுமாய் ஒன்றாக
நின்று சமய நிராகாரம் நீங்கியே
நின்ற பராற்பர நேயத்தைப் பாதத்தால்
சென்று சிவமாதல் சித்தாந்த சித்தியே”. -திருமந்திரம்

ஞானம் அடையவேண்டும் என்று எண்ணம் கொண்டு ”சுபேச்சா” நிலையில் இருக்கும் முதல் படியேற முயலுவோம் !

                                         - அண்ணாமலை சுகுமாரன் 

Comment here