ஏழைகளுக்கு மட்டுமே ரேஷன் அரிசி கொடுக்கப்பட வேண்டும்-சென்னை உயர்நீதிமன்றம்

Rate this post

 

வேலூர் மாவட்டத்தை சேர்ந்த அமர்நாத் என்பவர், ரேசன் அரிசி கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீதான இந்த வழக்கினை ரத்து செய்ய கோரி அவரது மனைவி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவானது இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு வழக்கறிஞர் தாக்கல் செய்த அறிக்கையில், இலவச ரேசன் அரிசி திட்டத்தைப் பொருத்தவரை வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஆய்வு செய்த நீதிபதிகள், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே இலவச ரேசன் அரிசி கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், “அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவசமாக ரேசன் அரிசி வழங்குவதால் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது. தேர்தல் லாபத்துக்காக இலவசங்களை வாரி வழங்கி மக்களை கையேந்தும் நிலைக்கு அரசுகள் தள்ளிவிட்டன” என்றும் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*