உலகம்

     ஏவுகணை தளத்தை மூடிவிட வடகொரியா சம்மதம்

Rate this post

 

 

வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னுடன் 2 முறை பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், 3வது முறையாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் வட கொரியவின் பியாங்யாங் நகருக்கு சென்றார்.  அவரை கிம் ஜாங் அன் விமான நிலையத்துக்கு வந்து நேரில் வரவேற்றார்.

தென் கொரிய அதிபர் மூன் ஜே இன்னுக்கு ராணுவ அணி வகுப்பு மரியாதையும் வழாங்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து இரு தலைவர்களும் முக்கிய பேச்சு வார்த்தை நடத்தினர். இந்தப் பேச்சுவார்த்தை இணக்கமான முறையில் நடந்ததாகவும், அணு ஆயுதங்களை விடுவதில் வடகொரிய மீண்டும் உறுதி எடுத்துக்கொள்ள வழி வகுத்து தந்தாகவும் சர்வதேச நோக்கர்கள் கூறுகின்றனர்.

.)

தென் கொரியா செல்கிறார் கிம்

தென் கொரியாவுக்கு வருமாறு அதிபர் மூன் ஜே இன் விடுத்த அழைப்பை கிம் ஜாங் அன் ஏற்றுக்கொண்டார். கூட்டு பேட்டியின் போது கிம் இந்த ஆண்டு இறுதிக்குள் கிம் ஜாங் அன் தென் கொரியாவுக்கு செல்வார் என தகவல்கள் கூறுகின்றன.  மேலும், ராணுவ பதற்றங்களை தணிக்கிற வகையில் தென் கொரிய ராணுவ மந்திரியும், வடகொரிய ராணுவதலைவரும் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

Comment here