வைரமுத்துவின்
பாடல் வரிகள்
நினைவுக்கு
வருகிறது!
உனது அதிய பணிகள் நெஞ்சில் ஊடுறுவுகிறது!
நீ !
அழகான
பஞ்ச வர்ண கிளியல்ல!
ஆனாலும்
உன்னை
அனைவருக்கும்
பிடிக்கும் !
காரணம் நீ
உயிர் காற்றை உற்பத்தி செய்யும் காரணிகளை உருவாக்கி வருகிறாய்!
அதோடு
மனிதமற்ற மனிதர்களின்
வீடுகளிலும்
கூடு கட்டுகிறாய்!
உலகின் முதல் பொறியாளன் நீ!
அதனால்தான்
உனது கூட்டை
அமீனாவும்
அகற்ற மாட்டான்!
நீ !
வீட்டுக்கு வந்த
விருந்தாளி அல்ல!
விருப்பத்திற்குரிய நேசன்!
சிறு தானியங்கள்
உனக்கு பிடிக்கும்
மனிதனுக்கு பிடிக்காது! பீசா பர்க்கர் என்கிறான்!
அசைவத்தை அளவில்லாமல்
கொடுத்தாலும்
அருகில் வர மாடடாய்!
காடுகளின் வளர்ப்பில் உனது பங்களிப்பு அளவற்றது!
ஆனால்
நீ வளர்த்த காடுகளும் அழிக்கப் படுகிறது, அதனால் நீயும் மரணிக்கிறாய்!
கூடவே கைபேசி
அலைக்கற்றை கோபுரங்களும் உன்னை கொலை செய்து வருகிறது!
உனக்கு வாதாட வக்கீல் இல்லை!
அதனால்தான் உயிருக்கு பயந்து தனிமையில் இருக்கிறாயோ?
வா!…. நானிருக்கேன்
வந்து செயற்கையை
வெற்றி கொள்!
என்னே முரண்பாடு!
உன்னை அழித்து வரும் அலைக்கற்றை கோபுரங்கள் வழியாகவே உன்னை காப்பதற்கு ஆசைப்படுகிறேன்! அழைப்பும் விடுக்கிறேன்!
அதனால்தான்
உனக்காக
காடும் வளர்க்கிறேன்!
ஏ! குருவி சிட்டுக் குருவி!
உன் ஜோடி எங்கே?
நீ
கூட்டி வந்து
நான் வளர்க்கும் க(ன்)னி மரங்களில் கூடு கட்டு!
பிழைத்து, பிழைக்க வை! மனிதமற்ற மனிதர்களை!
க. திருப்பதி, தியாகராசபுரம்.
Comment here