விளையாட்டு

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் தேர்வு

ஐதராபாத்,
ஐதராபாத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகளுக்கு இடையேயான 33-வது லீக் போட்டி தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து சென்னை அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்ய உள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 8 ஆட்டங்களில் விளையாடி அதில் 7 வெற்றி, ஒரு தோல்வி என்று மொத்தம் 14 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது.
முதல் 4 ஆட்டங்களில் 3–ல் வெற்றி பெற்று அசத்திய ஐதராபாத் அணி, அதன் பிறகு மும்பை, பஞ்சாப், டெல்லி ஆகிய அணிகளுக்கு எதிராக வரிசையாக தோல்வியை தழுவியது.
கடந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக ஆடிய இறுதிப்போட்டி உள்பட 4 ஆட்டங்களிலும் ஐதராபாத் அணி தோல்வியை தழுவியது.
இந்த சீசனிலும் சென்னை அணி பலம் வாய்ந்ததாக திகழ்வதால் ஐதராபாத் அணி வெற்றிப்பாதைக்கு திரும்ப கடுமையாக போராட வேண்டி இருக்கும்.

Comment here