அரசியல்உலகம்

ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேற இங்கிலாந்து மக்கள் ஆதரவு

 லண்டன்:

ஐரோப்பிய யூனியனை விட்டு வெளியேற இங்கிலாந்து மக்கள் அதிகளவில் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஐரோப்பிய யூனியனில், 28 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இதில் இருந்து வௌியேறுவது குறித்து, பொதுமக்களிடம் கருத்து ஓட்டெடுப்பு நடத்த, பிரிட்டன் முடிவு செய்தது. பிரிட்டனின் வரலாற்றில் நடக்கும், மூன்றாவது மக்கள் கருத்து ஓட்டெடுப்பு இதுவாகும். இதற்காக கடந்த, நான்கு மாதங்களாக தீவிர பிரசாரம் நடந்து வந்தது.

பொதுமக்கள் கருத்து ஓட்டெடுப்பு பரபரப்பாக நடந்தது. இருப்பினும், பல்வேறு இடங்களில் பலத்த மழையின் காரணமாக ஓட்டெடுப்பு பாதிக்கப்பட்டது. நாடு முழுவதும், 4.64 கோடி மக்கள் ஓட்டளிக்கும் தகுதி பெற்றுள்ளனர். 71 சதவீத ஓட்டுக்கள் பதிவாகின.இவர்கள் அளிக்கும் ஓட்டுகள், 382 ஓட்டு எண்ணும் மையங்களுக்கு கொண்டு சென்று ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. இதுவரை 210 மையங்களில் முடிவு வெளியிடப்பட்டன.

இந்த கருத்துக்கணிப்பில், 52 சதவீத மக்கள் ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேற வேண்டும் என ஆதரவு தெரிவித்துள்ளனர். 48 சதவீத மக்கள் ஐரோப்பிய யூனியனில் நீடிக்க ஆதரவு தெரிவித்துள்ளனர். ஐரோப்பிய யூனியனில், இங்கிலாந்து வெளியேற 1.69 கோடி பேரும், நீடிக்க வேண்டுமென 1.57 கோடி பேரும் ஓட்டுப்போட்டுள்ளனர். ஒட்டு எண்ணிக்கை 382 மையங்களில் நடந்தது. இதில் 5 மையங்களில் மட்டுமே முடிவு வெளிவர வேண்டியுள்ளது. ஐரோப்பிய யூனியனிலிருந்து இங்கிலாந்து முறைப்படி வெளியேற இன்னும் ஒரு சில ஆண்டுகளாகும். மக்களின் முடிவு காரணமாக உலகம் முழுவதும் உள்ள பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்து வருகின்றன.

Comment here