இந்தியாதமிழகம்பொதுவிளையாட்டு

ஐ.எஸ்.எல் : கேரளா பங்குகளை விற்று விலகினார் சச்சின்

இந்திய சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் கேரளாவின் பிளாஸ்டர்ஸ் அணியின் 20 சதவிகிதம் பங்குகளை விற்று சச்சின் தெண்டுல்கர் விலகியுள்ளார்.

இது குறித்து சச்சின் டெண்டுல்கர் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கேரள பிளாஸ்டர் அணி வெற்றிகரமாக 5-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. அடுத்த 5ஆண்டுகளுக்கு அணியை கட்டமைக்க இது முக்கியமான தருணம். அதேசமயம், என்னால் எந்தவிதமான பங்களிப்பையும், பணியையும் அளிக்க முடியும் என்பதற்கான நேரம். என்னுடைய அணி நிர்வாகத்துடன் தீவிரமாக ஆலோசனை நடத்தியபின், என்னுடைய அணியில் பங்குதாரர் குழுமத்தில் இருந்து விலகுவது என முடிவு செய்துள்ளேன். கேரள பிளாஸ்டர் அணியை விட்டு நான் விலகினாலும், என்மனது எப்போதும் கேரள பிளாஸ்டர்கை நினைத்துக்கொண்டே இருக்கும்.

கேரள பிளாஸ்டர்ஸ் அணி மிகச்சிறப்பான நிலைக்கு மாறும், அதிகமான வெற்றிகளைக் குவிக்கும், அதற்கு ரசிகர்கள் நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பார்கள் என வலிமையாக நம்புகிறேன். கேரள பிளாஸ்டர்ஸ் அணியை நினைத்து பெருமை கொள்கிறேன். கேரள பிளாஸ்டர்ஸ் அணி கடந்த 4 ஆண்டுகளாகக் எனது வாழ்வில் ஒரு அங்கமாக இருந்து வந்தது. இந்த 4 ஆண்டுகளில் பல்வேறு உணர்ச்சி மிகு தருணங்களை ரசிகர்களுடன், வீரர்களுடன் பகிர்ந்து கொண்டேன். இந்த 4 ஆண்டுகாலஅனுபவத்தை என்னால் மறக்க இயலாது. நான் கேரள பிளாஸ்டர்ஸ் அணியில் இல்லாவிட்டாலும் கூட எனது ஆதரவு எப்போதும் உண்டு ’’எனத் தெரிவித்துள்ளார்.

Comment here