தொழில்நுட்பம்

ஐ.சி .எப் தொழிற்சாலையில் நவீன இரயில் பெட்டிகள்தயாரிப்பு

Rate this post

சென்னை பெரம்பூர் ஐ.சி.எப் தொழிற்சாலையில் நவீன பெட்டிகள் தயாரிப்பு

நீண்ட தூரம் செல்லகூடிய மின்சார ரயில்களில் புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தி பயணிகளின் வசதியை மேம்படுத்த பல்வேறு புதிய வசதிகளை சென்னை பெரம்பூரில் உள்ள ஐ.சி.எப் தொழிற்சாலையில் மின்சா ரசிக்கனத்துடன்  விரைவாக செல்லகூடிய வகையில் ஸ்டெயின்லெஸ்ஸ்டீல் கட்டுமானத்துடன் மும்முனை மின்சாரத்தில் இயங்ககூடிய வகையில் வடிவமைக்கபட்டுள்ளது.இரயில் பேடிகளின் முன்புறதோற்றம் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது.ஓட்டுனர் அறை குளிர் சாதன வசதி செய்யப்பட்டுள்ளது.குஷன் இருக்கைகள், பயணிகள் சுலபமாக ஏறி இறங்க அலுமினியம் ஸ்லைடிங் கதவுகள், மின்சிக்கனத்தை கடைபிடிக்கும் எல்.இ .டி விளக்குகள், பயணிகளின் பாதுகாப்பிற்க்காக சி.சி.டி கேமராக்கள்,ஜி.பி.எஸ் கருவியல் இயங்கும் அறிவிப்புகள் போன்ற வசதிகளும்,ரூபாய் 8 கோடி செலவில் நவீன வசதிகள் கொண்ட 8 பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த நவீன இரயில் பெட்டிகள் தென்கிழக்கு மத்திய ரெயில்வேயின்பிலாஸ்பூர் கொண்டு செல்லப்படுகிறது.இந்த புதிய ரயிலை ரயில்வே வாரிய முன்னால் இயந்திர பொறியியல் துறை உறுப்பினர் எஸ்.தாசரதி,இறைல்வே வாரிய முன்னால் நிதி ஆணையர் விஜயகந்த்கொடியசைத்து தொடங்கி வைத்தனர். தென்கிழக்கு மத்திய இரயில்வேயின் தலைமை இயந்திரவியல் பொறியாளர் கோவிந்த குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Comment here