விளையாட்டு

ஐ லீக் கால்பந்து: சென்னை சிட்டி அணி ‘சாம்பியன்’

கோவை : 12–வது ஐ லீக் கால்பந்து போட்டி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்தது. 11 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா 2 முறை லீக்கில் மோதின. இதில் கோவை நேரு ஸ்டேடியத்தில் நேற்று நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் சென்னை சிட்டி எப்.சி. அணி, நடப்பு சாம்பியன் மினர்வா பஞ்சாப் எப்.சி. அணியை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் சென்னை சிட்டி அணி 3–1 என்ற கோல் கணக்கில் மினர்வா பஞ்சாப் அணியை வீழ்த்தியது. சென்னை சிட்டி அணியில் பெட்ரோ மான்சி (56–வது நிமிடம்) ஒரு கோலும், கவுரவ் போரா (69–வது, 90–வது நிமிடம்) 2 கோலும் அடித்தனர். மினர்வா பஞ்சாப் அணி தரப்பில் ரோலண்ட் பிலாலா 3–வது நிமிடத்தில் கோல் அடித்தார். லீக் ஆட்டங்கள் முடிவில் 13 வெற்றி, 4 டிரா, 3 தோல்வியுடன் 43 புள்ளிகள் பெற்ற சென்னை சிட்டி அணி சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது. 13 வெற்றி, 3 டிரா, 4 தோல்வியுடன் 42 புள்ளிகள் பெற்ற ஈஸ்ட் பெங்கால் அணி 2–வது இடம் பெற்றது.

Comment here