Sliderகல்வி

ஒருகோடி சித்தருண்டு

பேச இயலாத பேச்சு – 2

ஒருகோடி சித்தருண்டு அவர்கள் பெயரை
ஓகோகோ எழுதிடவே அடங்காதையா

— சச்சிதானந்த சுழுமுனை சூத்திரம் 23

இப்படிச்சென்ற பகுதி முடிந்திருந்தது என்று முடிந்திருந்தது . இனி பேச்சின் அடுத்தப்பகுதியைக்காணலாம்

நம்மை சென்ற நூற்றாண்டில் ஆண்ட ஐரோப்பியர்கள்
நம்மிடம் இருந்து செல்வதுடன் சேர்த்த நமது அறிவு செல்வங்களான பல ஒலைச்சுவடி புத்தகங்களை எடுத்துச்
சென்றனர் .
ஐரோப்பியர்கள் ஒலைச்சுவடி புத்தகங்களை எடுத்துச்
சென்றது: ஐரோப்பியர்களின் ஆட்சி காலங்களில்,
தென்னிந்தியாவிலிருந்து லட்சக் கணக்கான ஓலைச்சுவடி
புத்தகங்கள், மரப்பட்டை நூல்கள், துணிப் படங்கள், கருவிகள், உபகரணங்கள் முதலியன அவரவர் நாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டன.
ஓலைச்சுவடிகள், நகல்கள், பதிப்பிக்கப்படாதவை: கோபன்ஹேகன் (டென்மார்க்), பாரிஸ் (பிரான்ஸ்), பெர்லின் (ஜெர்மனி), டப்லின் (அயர்லாந்து), ரோம் (இத்தாலி), ஆம்ஸ்டெர்டாம் (நெதர்லாந்து), லிஸ்பன் (போர்ச்சுகல்), லண்டன் (இங்கிலாந்து) முதலிய நாடுகளிலுள்ள நூலகங்கள் மற்றும் ஆவணக்காப்பகங்களில் ஆயிரக்கணக்கான ஓலைச்சுவடிகள், பழைய நூல்கள் முதலியவையுள்ளன. இவை ஆராய்ச்சியாளர்களுக்கு எட்டப்படாத நிலையில் உள்ளன இவைகளில் சில இப்போது என்னால் பிற நண்பர்களின் உதவியுடன் சேகரிக்கப்பட்டுள்ளது இன்னமும் தொடர் ஆய்வு உழைப்பு தேவை
வரலாற்று ஆய்வாளர்கள் பல்வேறு அகத்தியர்கள்
வாழ்ந்தார்கள் என்று கூறுகின்றனர். 86 அகத்தியர்கள்
வெவ்வேறு காலங்களில் வாழ்ந்த ஆதாரங்கள் உள்ளதால்,
அவர்கள் வெவ்வேறானவர்களே என்ற முடிவுக்கு
வருகின்றனர்.

இ ப்படி சித்தர்கள் பட்டியல் கணக்கில்லாமல்
பெருகிக்கொண்டே செல்கிறது. ஆயினும் பதினெட்டுப் புராணங்கள், பதினெட்டுப் படிக,
பதினெண் குடிமை, பதினெண் பாஷை என்று வரையறை
செய்தது போல
சித்தர்களையும் பதினெண் சித்தர்களாக ஒரு வரையறை
செய்தனர். சங்கப் புலவர்கள் செய்த நூல்கள் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்
கீழ்க்கணக்கு என் எண்ணிக்கையில் தொகுத்தது போலவே இப்பதினெண்
சித்தர் பாடல்களும் பெரிய ஞானக்கோவை என்ற நூலாகத் தொகுத்தனர். ஏனைய சித்தர் பாடல்கள் அவரவர் பெயராலேயே தொகுக்கப்பட்டன.
இதற்கு சித்தர்கள் யுகங்கள் பல தாண்டி, மரமிணமிலாப்
பெருவாழ்வு பெற்று இன்றும் வாழ்பவர்கள் என்பதை
இன்றைய விஞ்ஞான அறிவின் மூலம் அறிந்து கொள்ள
முடியாமையே காரணமாகும்.
இன்னும் சிலர் 14ம் நூற்றாண்டிலும், 16ம் நூற்றாண்டிலும்
தோன்றியவர்கள் தான் தமிழ்ச்சித்தர்கள் என்று கூறுகின்றனர்.
இவ்வாறு இன்றைய ஆராய்ச்சியாளர்கள் தங்கள் அறிவுக்கு எட்குருமுனியென்றும் கும்பமுனியென்றும் அழைக்கப்படும்
அ கத்தியரின் வயதைப் பற்றி போகர்
சொல்வதைக் கீழ்க்காணும் பாடலில் காணலாம்.

“பகருவேன் அகத்தியருக்கு வயது ஏதென்றால்
… பட்சமுடன் துகை கணக்கு கூறொண்ணாது
நிகரமுடன் சொல்வதற்கு யாராலாகும்
… நீதியுடன் நூல்களில் உரைத்த மார்க்கம்
அகரமென்ற அட்சரமும் அவரால் ஆச்சு
… அப்பனே நாலுயுகம் கடந்த சித்து
சகரமெல்லாம் தான் துதிக்கம் கும்பயோனி
… சதுரான அகத்தியர் என்று அறையலாமே”
-போகர் சப்தகாண்டம் 57:5டியவைகளைக் கூறுகின்றனர்.

சித்தர்கள் என்றாலேஇப்போதெல்லாம் பெரும்பாலோரின் மன சித்தரிப்பு உண்மைக்குமாறான புரிதலுடன்
கூடியதாகத்தான் இருக்கிறது. தாடிவைத்து, சுலபத்தில்
புரியாமல் பேசினால் அவரை சித்தர் என ஒரு பொதுப்பெயர் சூட்டி பாராட்டிவிடுவது இப்போது புழக்கத்தில் வநது விட்டது

சித்தர்களில் தலை சிறந்த திருமூலர்

“என்னை நன்றாக இறைவன் படைத்தனன்

தன்னை நன்றாக தமிழ் செய்யுமாறே ”

என்கிறார் சித்தர்கள் என்போர் அமுதூறும் தமிழில் பெரும்
வித்தைகள் படைத்தோர் ..அரியபல வாழ்வியல் கலைகளை நடைமுறைப்படுத்தும் முறை அறிந்த விற்ப்பனர்கள்

சித்தர்கள் என்போர் வெறும் மருத்த்வர்கள் மட்டுமல்லர் ,
வெற்று வேதாந்தம் பேசும் வறட்டு புலவர்கலும் அல்லர்
வெந்ததை தின்று விதி வந்ததும் போகச் சொல்லும்
கர்மவினையை
போதிக்கும் வைதீக சமய கும்பலைச் சேர்ந்தவருமல்லர் .அவர்கள் வாழும் போதே வாழ்வின் பயனை ,
மண்ணிலேயே விண்ணைக் காணச் சொன்னவர்கள்
தற்போது கிடைத்த உடலைக்கொண்டே ,அதை கற்பங்கள்
உண்டு
பலகாலம் வாழும் வழி அறிந்து ,மரணமில்லா பெருவாழ்வு வாழும் வித்தை அறிந்தவர்கள் . கர்ம வினையை வாழும்
போதே கழிக்கும் வித்தை அறிந்தவர்கள்
பிறத்தலின் பயன் முடியும்வரை இங்கேயே வாழக்கற்றவர்கள்
பிறத்தலின் பயனே பரிணாமத்தின் அடுத்தபடி போவதுதானே !
விரும்பும் வரை இறப்பை தள்ளிவைக்கும் வித்தை
கற்றவர்கள் .

இந்த அண்ட பிண்ட சராசரங்கள் அத்தனையும் இயக்குகின்ற சக்தியை உணர்ந்தவர்கள் .அவர்கள் காண்கின்ற எல்லையற்ற
பரம்பொருள் இங்கும் எங்கும் விரவி இருப்பதை
உணர்ந்தவர்கள் .
சமயங்களுக்கு அப்பாற்ப்பட்டவர்கள் .
எந்த மத்ததில் இருந்தாலும் பரம் பொருளை உணர்ந்தவர்கள்
சொல்லப்போனால் மனித குலத்தில் யார் ஒட்டுமொத்தமாக ஆனந்தமாக இருக்கிறார்கள் ?

இறப்பு இல்லாத மனிதர்கள் யார் ?
மூப்பு இல்லாத மனிதர்கள் யார் ?
நோய் இல்லாத மனிதர்கள் யார் ?
புத்தர் இறப்பு ,மூப்பு நோய் முதலிய மனிதனின்
துக்கங்களைப்பார்த்துத்தானே அதற்க்கு வழி காண துறவு
பூண்டார் என்று கதைகள் கூறுகின்றன .
ஆனால் இதுவரை மனித குலத்தின் மாறாத இந்த
துயரங்களுக்கு விடிவு வந்ததா ?
யாராவது ,எந்தமதமாவது, இது செய்தால் இறப்பு ,மூப்பு
நோய் வராது என்று அறுதி இட்டு கூறி வழியைக் கூறி
இருக்கிறார்களா ?
ஆனால் சித்தர்கள் அனைவரும்இந்த மானுடத்தின் இத்தகைய ஒட்டுமொத்த துயரங்களுக்கு வழி முறை கூறி இருக்கிறாரகள்
அதுவும் ஒரேமாதிரேஏதும் பொருளில் கூறியிருக்கிறார்கள்
மரணமில்ல பெருவாழ்வே ,அவர்களின் லட்சியம் , வாழும் இதே உடலில் இருந்தே முக்தி பெறும் ,விடுதலை பெறும் ஆர்வம் கொண்டவர்கள்

வாழ்வின் அத்தனை புதிர்களுக்கும் ,விடையைக் கண்டவர்கள்
அவர்கள் தொடாத வாழ்வின் நெறிகளோ உண்மைகளோ
எதுவும் இல்லை எனலாம் ஆனாலும் சித்தர்கள் எனப்படுவோர் மிகவும் நடைமுறை வாதம் கொண்டோர்

அவர்களின் அறிவுப்பாதையில் வெறும் வேதாந்த சித்தாந்த பேச்சுகள் மட்டும் இல்லை கூடவே அத்தனைக்கும் நடைமுறைப்படுத்தும் விதிமுறை அறிந்தவர்கள் .வாழ்வின் அத்தனை விதி முறைகளும் அறிந்து வாழ்வின் விதியை வாழும் போதே மாற்றும் வல்லமை படைத்தவர்கள் .வினையைப்போக்க மீண்டும் மீண்டும் பிறப்பதை மறுத்தவர்கள் .
தானே இறையென தெரிந்தவர்கள் மட்டுமல்லர் .
தானே இறையென முற்றும் உணர்ந்தவர்கள் .
இனி அவர்கள் சிந்தையில் மலர்ந்த அறிவியல் உண்மைகள் ஒவ்வொன்றாகப் பார்க்கலாம் .

உயிரே ! உயிரே !
அரிது அரிது மானிடராய் பிறத்தலரிது என்கிறார் பெண் சித்தர் அவ்வை அரிதாய் தோன்றிய மனித உடல் அழியக்காரணம்
என என சிந்திக்கிறோம் .உயிர்போய்விட்டது என்கிறோம் .
அந்த உயிர் இத்தனை நாள் எங்கிருந்தது என்ற கேள்வி வருகிறது .
எனவேதான் பிறக்கும் குழந்தை தொப்புழ்கொடியுடன்
சேர்ந்தே பிறக்கிறது போலும் .
குழந்தை தாயின் வயிற்றில் இருந்து வெளிவந்து ,இந்த
மண்ணைத் தொட்டதும் அது அழுதே ஆகவேண்டும் .,
இல்லையேல் மற்றவர் அழத்தொடங்குவர் .
அழுகையே பிறக்கும் ஒவ்வருவரும் செய்யும் முதல் காரியம் .
குழந்தை அழும்போது முதல் முதலாக காற்று உடலின்
உள்ளே புகுகிறது .உயிரும் சுவாசத்துடன் கலந்து உள்ளே
செல்கிறது .
உள்ளே சென்ற உயிர் உடலில் எங்கே சென்று அமர்வதாக
சித்தர்கள் கூறியிருக்கிறார்கள் என்று பார்ப்போமா ?
“உச்சிக்குக் கீழே உண்ணாக்கு மேலே
வச்ச பொருளின் வகையரிவாரில்லை” !

திருமந்திரம் 309

“உற்றாரும் ஆவி அமர்ந்திடம் உச்சியே” !

திருமந்திரம் 197

இவ்வாறு உச்சகுக் கீழே உண்ணாக்கு மேலே உயிர்
இருப்பதாக நமது சித்தர்கள் கூறுகிறார்கள் .மேலும் அது 1008
இதழ் தாமரை மலரில் வீற்றிருப்பதாக கூறுகிறார்கள் .

அங்கே வீற்றிருந்தாலும் அதன் வடிவம் எத்தகையது
எனயாருக்காவது தெரியுமா என்றால் அதையும்
கூறுகிறார்கள் நமது சித்தர்கள் .
” மேவி எழுகின்ற செஞ்சுடர் ஊடுசென்று ”

திருமந்திரம் 1777
” ஜோதியே ! சுடரே ! சூழ் ஒளிவிளக்கே ! ”

மாணிக்கவாசகர்

” ஊனறிந்துள்ளே உயிர்க்கின்ற ஒண்சுடர் ”

திருமந்திரம் 1797
” உற்றிந்து பாரடா உள் ஒளிக்கு மேல் ஒளி
அத்தனார் அமர்ந்திடம் அறிந்தவன் அனாதியே ! ”

— சிவவாக்கியர்
இவ்வாறு அணுவுக்கு அணுவாக நீல நிற ஒளிவட்டமாக
விளங்கும் சக்தியின் பீடத்தின் நடுவில் தீபச் சுடராக சிவம்
விளங்குகின்றது எனவும் அந்த தீப வடிவே உயிரின் வடு எனக்
கூறப்படுகிறது .
இத்தகைய தீபச் சுடரின் வடிவத்தையே நாம் சிவலிங்கம்
என்று வழிபடுகிறோம் போலும் .
இதையே திருமூலர் உயிர்தான் சிவலிங்கம் என தெளிவாகக்
கூறுகிறார் .

“தெள்ளத் தெளிவோர்க்குச சீவன் சிவலிங்கம் ”

திருமந்திரம் 1823-

வடிவத்தைக் கூறிய நமது சித்தர்கள் சித்தர்கள் உயிரின்
அளவைப் பற்றி மட்டும் கூறாமலா விட்டிருப்பார்கள் .

ஒரு பசுவின் உடலில் இருந்து ஒரு மயிரை எடுத்து ,அதை
ஒரு லக்ஷம் பிரிவாக பிரித்தால் ,அதன் ஒரு பிரிவின் அளவே
உயிரின் அளவாகுமாம் இதைக் கூறுவது நமது திருமூலர்தான் .

மேவி சீவன் வடிவது சொல்லிடில்
கோவின் மயிரொன்று நூறுடன் கூறிட்டு
மேவிய கூறது ஆயிரம் ஆயினால்
ஆவியின் கூறது நூராயிர்த்தொன்றே !”

திருமந்திரம் 2011

இவ்வாறு உயிரைப்பற்றி நமது சித்தர்கள் பலர் நீண்ட பல
விளக்கங்கள் கொடுத்திருந்த போதிலும் ,இதுவரை
சித்தர்களின் இத்தகைய கருத்துக்கள் இன்னும் நவீ
ஆய்வுக்கு உட்படுத்தமலேயே காத்துக் கிடக்கிறது .

தொடரும்

இந்த பேச்சில் இடம் பெற்ற செய்தொய்கள் நான் 2010 இல் எழுதிய பழைய கட்டுரைகளில் இடம்பெற்றவை .பலரும் இதை முன்பே படித்திருக்கலாம் .

அண்ணாமலைசுகுமாரன்

Comment here