இயல்தமிழ்

ஒருமை பெண்மை உடையன் சடையன்

Rate this post

ஏடுடைய மலரான் முனை நாட்பணிந்(து) ஏத்த அருள்செய்த
பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே.

முற்றல் ஆமை இளநாகமொ டேன முளைக்கொம்பவை பூண்டு
வற்றந் ஓடு கலனாப்பலி தேர்ந்தென(து) உள்ளம் கவர் கள்வன்
கற்றல் கேட்டல் உடையார் பெரியார் கழல் கையால் தொழுதேத்தப்
பெற்றும் ஊர்ந்த பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே.

நீர் பரந்த நிமிர் புன்சடை மேலோர் நிலா மெண்மதி சூடி
ஏர் பரந்த இனவெள்வளை சோர என் உள்ளம் கவர் கள்வன்
ஊர் பரந்த உலகின் முதலாகிய ஓர் ஊர் இது என்னப்
பேர் பரந்த பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே.

விண் மகிழ்ந்த மதில் எய்ததும் அன்றி விளங்கு தலைஓட்டில்
உண் மகிழ்ந்த பலி தேரிய வந்(து) எனதுள்ளம் கவர் கள்வன்
மண் மகிழ்ந்த அரவம் மலர்க் கொன்றை மலிந்த வரை மார்பிற்
பெண் மகிழ்ந்த பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே.

ஒருமை பெண்மை உடையன் சடையன் விடைஊரும் இவன்என்ன
அருமையாக உரை செய்ய அமர்ந்(து) எனதுள்ளம் கவர் கள்வன்
கருமை பெற்ற கடல் கொள்ள மிதந்ததோர் காலம் இது என்னப்
பெருமை பெற்ற பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே.

மறை கலந்த ஒலி பாடலோ(டு) ஆடலர் ஆகி மழு ஏந்தி
இறை கலந்த இன வெள்வளை சோர என் உள்ளம் கவர் கள்வன்
கறை கலந்த கடியார் பொழில் நீடுயர் சோலைக்கதிர் சிந்தப்
பிறை கலந்த பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே.

சடை முயங்கு புனலன் அனலன் எரி வீசிச் சதிர்வெய்த
உடை முயங்கும் அரவோ(டு) உழிதந்(து) எனதுள்ளம் கவர் கள்வன்
கடல் முயங்கு கழிசூழ் குளிர் கானல் அம்பொன்னஞ் சிற(கு) அன்னம்
பெடை முயங்கு பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே.

வியர் இலங்கு வரை உந்திய தோள்களை வீரம் விளைவித்த
உயர் இலங்கை அரையன் வலி (செற்று) என(து) உள்ளம் கவர் கள்வன்
துயர் இலங்கும் உலகிற் பல ஊழிகள் தோன்றும் பொழுதெல்லாம்
பெயர் இலங்கு பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே

தாணுதல் செய்திறை காணிய மாலொடு தண் தாமரையானும்
நீணுதல் செய்தொழியந் நிமிர்ந்தான் எனதுள்ளம் கவர் கள்வன்
வாணுதல் செய் மகளிர் முதலாகிய வையத்தவர் ஏத்தப்
பேணுதல் செய் பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே.

புத்தரோடு பொறியில் சமணும் புறம்கூற நெறி நில்லா
ஒத்த சொல்ல உலகம் பலி தேர்ந்தென(து) உள்ளம் கவர் கள்வன்
மத்த யானை மறுகவ்வுரி போர்த்ததோர் மாயம் இது என்னப்
பித்தர் போலும் பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே.

அருநெறிய மறை வல்ல முனிஅகன் பொய்கை அலர் மேய
பெருநெறிய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் தன்னை
ஒருநெறிய மனம் வைத்துணர் ஞானசம்பந்தன் உரை செய்த
திருநெறிய தமிழ் வல்லவர் தொல்வினை தீர்தல் எளிதாமே….!

திருச்சிற்றம்பலம்

Comment here