இல்லறம்

ஒருவன் தனது மனைவியிடம் சொல்லும் வார்த்தைகளை அப்படியே எடுத்துக் கொள்ள முடியாது. அதற்கு ஒரு உள்ளர்த்தம் நிச்சயமாக இருக்கும். சில உதாரணங்களைப் பார்க்கலாமா?

Rate this post
 • உனக்காக என் உயிரைக் கொடுப்பேன் கண்ணே!
  (எப்படியும் அதை நீ எடுக்கத்தானே போகிறாய்)

 • இந்தப் புடைவை உனக்கு ரொம்ப அழகாயிருக்கு, ஹி!ஹி!
  (கவனி… புடைவைதான் அழகாயிருக்கு.)

 • கொஞ்ச நாள் பிறந்த வீட்டுக்குப் போய் ரெஸ்ட் எடு, டியர்!
  (கொஞ்ச நாள் நான் ரெஸ்ட் எடுக்கிறேன்)

 • நமக்குக் கல்யாணம் ஆகி 25 வருஷமாகியும் அன்னிக்கு இருந்த மாதிரியே இன்னிக்கும் இருக்கே.
  (எந்த விஷயத்திலேயும் முன்னேற்றமே இல்லை!)

 • உன்னைப் பார்த்தா 45 வயசுன்னு யாருமே நம்ப மாட்டாங்க.
  ( 60 வயசு இருக்கம்னு அடிச்சு சொல்லுவாங்க)

 • நீ ஒரு பத்து நாள் ஊருக்கப் போறதா சொல்றியே. பிற்பாடு எனக்குச் சாப்பாடு விஷயத்துல பெரிய பிரச்னையாயிடுமே!)
  (நல்ல சாப்பாடு சாப்பிட்டுப் பழகியாச்சுன்னா மறுபடி உன் சாப்பாடு சாப்பிட முடியாதே!)

 • உன்னால எப்படி ஓய்வு ஒழிச்சல் இல்லாம வேலை செய்ய முடியுது?
  ( உன்னால எப்படி என்னை ஓய்வு ஒழிச்சல் இல்லாம கண்காணிக்க முடியுது?)

குறிப்பு:
மனைவி ஊரில் இல்லையெனில்
ஒரு கை ஒடிந்து போல் இருக்கும்
ஆனால்…பத்து ரெக்கை முளைத்து விடும் ..!

Comment here