தமிழகம்

ஒரு நாளுக்கு 7 பேரின் உயிரை பறிக்கும் சுகாதாரமற்ற நீர்..!

சுகாதாரமற்ற நீர் நாளொன்றுக்கு 7 பேரின் உயிரைப் பறிப்பதாக ஆய்வு ஒன்று கணித்துள்ளது.

மத்திய சுகாதாரப் புலனாய்வு வாரியம், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் ஆய்வில் இந்தியாவில் 56 சதவீத மக்கள் நிலத்தடி நீரையே பயன்படுத்துகின்றனர். 620 மாவட்டங்களில் 50 சதவீத மக்கள் சுகாதாரமற்ற நிலத்தடி நீரைப் பருகுவதாகக் குறிபிட்டுள்ளனர். இயற்கையாகவும், ரசாயனம் போன்றவை கலந்து செயற்கையாகவும் குடிநீர் மாசடைவதால் அதனைப் பருகுவோருக்கு காலரா, டைபாய்டு, டயாரியா, வைரல் ஹெபடைடிஸ் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.

இத்தகைய வியாதிகளால் கடந்த ஆண்டில் மட்டும் நாளொன்றுக்கு 36 ஆயிரம் பேரும், 5 ஆண்டுகளில் 7 கோடியே 6 லட்சம் பேரும் பாதிக்கப்படுகின்றனர். கடந்த 5 ஆண்டுகளில் 2 ஆயிரத்து 439 பேர் மாசடைந்த நீரால் ஏற்பட்ட வியாதிகளில் உயிரிழந்திருப்பதாக ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சராசரியாக 4 மணி நேரத்துக்கு ஒரு உயிர் வீதம் சுமார் 7 பேர் ஒருநாளைக்கு சுகாதாரமற்ற குடிநீரால் உயிரிழக்கின்றனர்.

Comment here