தமிழகம்

ஒரே நாடு, ஒரே ரேசன் கார்டு திட்டத்தை அமல்படுத்த ஓராண்டு காலம் கெடு!

ஒரே நாடு, ஒரே ரேசன் கார்டு திட்டத்தை அமல்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ஓராண்டு காலம் கெடு விதித்துள்ளது.

இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய உணவத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான், நாட்டின் எந்த இடத்திலும் ரேசன் கார்டை பயன்படுத்திக் கொள்ளும், ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டத்தை அமல்படுத்த மாநில அரசுகளுக்கு ஒரு வருடம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

இது தொடர்பாக அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், இந்த திட்டத்தை அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் தேதிக்குள் அனைத்து மாநில அரசுகளும் தவறாமல் அமல்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Comment here