கல்வி

ஒளவையின் நல்வழி

“வெட்டனவை மெத்தனவை வெல்லாவாம் வேழத்தில்

பட்டுருவுங் கோல்பஞ்சில் பாயாது-நெட்டிருப்புப்

பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின்

வேருக்கு நெக்கு விடும்” – நல்வழி

யானையின்(வேழத்தில்) மீது பட்டு துளைத்துச் செல்லும் அம்பானது, பஞ்சின் மேல் வீசுங்கால் அதைப் பாய்ந்து செல்லாது. இரும்புப் பாரையை வைத்து அடித்தாலும் பிளக்க முடியாத பெரும் பாறையானது பசுமையான மரத்தின் வேருக்குப் பிளவுபட்டுவிடும். வன்சொற்களால் யாரையும் வெல்ல முடியாது. மென்சொற்களே மேன்மையாகும்…

Comment here