ஜோசியம்

ஓம் நமோ பகவதே

விஷ்ணு கோவில்களில் உள்ள சக்கரத்தாழ்வார் வழிபாடும் நவகிர தோஷங்களை நீக்கும் என்பது ஐதீகம். சக்கரத்தாழ்வார் சன்னதியில் நெய் தீபம் ஏற்றி, `

ஓம் நமோ பகவதே மகா சுதர்சனாய நம’

என்ற மந்திரம் சொன்னால் நவகிரக தோஷங்கள் விரைவில் நீங்கிவிடும்.திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கூடும் என்பதும் ஐதீகம். கிரகங்களின் தாக்கங்களைக் குறைக்கவோ, அதிகரிக்கவோ வேண்டும் என்றால் அந்த கிரகங்களுக்குண்டான நாட்களில் அந்த கிரகங்களின் தானியத்தால் செய்த உணவுகளை தானம் தருவதன் மூலம் நல்ல பலன்கள் நம்மை வந்தடையும்.

சூரியன்:- இவரின் தானியம் “கோதுமை.” எனவே கோதுமையால் செய்த உணவுகளை ஞாயிற்றுக் கிழமையில் தானம் செய்துவர நன்மைகள் நம்மை வந்து சேரும்,

வேலை தேடுபவர்கள், பதவி உயர்வு எதிர்பார்ப்பவர் கள், ஆண் குழந்தை எதிர்பார்ப்பவர்கள், அரசு வேலைக்கு முயற்சி செய்பவர்கள், அரசியலில் இருப்பவர்கள், தலைமுறையாக தொழில் செய்பவர்கள், இவர்களைல்லாம் இந்தப் பரிகாரம் செய்துவர நினைத்தது நடக்கும்.

சந்திரன்:- இவரின் தானியம் “நெல்.” எனவே “பச்சரிசி” யில் செய்த உணவுகளை திங்கட்கிழமையில் தானம் செய்துவர நன்மை கிடைக்கும்.

கதை, கவிதை, இலக்கியம் படைப்பவர்கள், அலைச்சல் மிகுந்த வேலை செய்பவர்கள், வாகனம் சம்பந்தப்பட்ட(டிராவல்ஸ்) தொழில் செய்பவர்கள், வெளிநாடு செல்ல முயற்சிப்பவர்கள், உணவகத் தொழில் செய்பவர்கள், அடிக்கடி பணி இடமாற்றத் தை சந்திப்பவர்கள் இவர்களெல்லாம் இந்தப் பரிகாரத்தை செய்துவர நன்மை உண்டாகும்.

செவ்வாய்:- இவரின் தானியம் “துவரை.” எனவே துவரையால் செய்த உணவுகளை தானம் செய்ய வேண்டும்.

மருத்துவர்கள், விளையாட்டு வீரர்கள், உடற்பயிற்சி மையங்கள் நடத்துபவர்கள், ஜேசிபி , டிராக்டர் போன்ற விவசாய இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்கள், கட்டிடத்தொழில் செய்பவர் கள், ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள், கட்டு மான பொருள் வியாபாரம் செய்பவர்கள், செங்கல் சூளை, கேட்டரிங் தொழில் செய்பவர்கள், மருந்துக் கடை வைத்திருப்பவர்கள் இவர்களெல்லாம் துவரை கலந்த உணவுகளை செவ்வாய்க்கிழமைகளில் தானம் செய்துவர நன்மை பெருகும்.

புதன்:- இவரின் தானியம் “பச்சைப்பயறு.” இதை சுண்டல் செய்து தானம் தர நன்மை உண்டாகும்.

கல்வியாளர்கள், எழுத்துத் துறை சார்ந்தவர்கள், எழுத்தாளர்கள், கமிஷன் மண்டி தொழில், ஏஜென்சி தொழில், தரகுத்தொழில், திருமணத்தரகர்கள், மளிகைக்கடைக்காரர்கள், ஆடிட்டர்கள், கணக்காளர் கள், வங்கி பணியாளர்கள், சித்த மருத்துவர்கள், மனை வியாபாரம் செய்பவர்கள், நரம்பு மற்றும் தோல் மருத்துவர்கள், அழகுநிலையம் நடத்துபவர்கள் என இவர்கள் பச்சைப்பயறு தானங்களை புதன்கிழமைகளில் செய்துவர நன்மை அளிக்கும்.

குரு:- இவரின் தானியம் “கொண்டைக்கடலை.” இதை வியாழக்கிழமைகளில் தானம் வழங்கினால், நன்மை உண்டாகும்.

திருமணம், புத்திர சந்தானம், நல்ல வேலை, தொழில், உயர் கல்வி என அனைத்து எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றித்தருவார்,

கல்வியாளர்கள், உபதேசத் தொழில் செய்பவர்கள், பேச்சைத் தொழிலாக கொண்டவர்கள், உபந்யாசம் செய்பவர்கள், வட்டித்தொழில், அடகுத் தொழில், சிட்பண்ட், கிளப், தவணைமுறை வியாபாரிகள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், வங்கிப்பணியாளர் கள் என இவர்களெல்லாம் வியாழன் தோறும் கொண்டைக்கடலை தானம் செய்துவர, குருவின் அருள் பார்வை கிடைக்கும்.

சுக்கிரன்:- இவரின் தானியம் “மொச்சை.” இந்த மொச்சைப் பருப்பை சுண்டல் செய்து வெள்ளிக் கிழமை தோறும் தானம் தர செல்வ வளம் பெருகும்.

கலைத்துறை சார்ந்தவர்கள், இசை, நடனம், கலை, சினிமா, நாடகத்துறை , ஆபரணக்கடை, ரெடிமேட் கடை, கவரிங் கடை, வளையல் பொட்டு போன்ற பெண்கள் தொடர்புடைய கடை நடத்துபவர்கள், வெள்ளிப் பொருட்கள், ஆடம்பரப்பொருள் விற்பனை, அழகுநிலையம், இவர்களெல்லாம் வெள்ளிக்கிழமை களில் மொச்சை தானம் தர செல்வம் பெருகும்.

சனி:- இவரின் தானியம் “எள்.” எனவே, எள் கலந்த உணவை தானம் தர சனியின் அற்புதப் பலன்கள் நம்மை வந்தடையும்.

தொழிலாளிகள், உடல் உழைப்பு அதிகம் உடையவர் கள், சேவைசார்ந்த தொழில் செய்பவர்கள், அரசியல் வாதிகள், கடைநிலை ஊழியர்கள், தோல் பொருள் விற்பனை, காலணி கடை, இரும்புத் தொழில், பழைய இரும்பு வியாபாரம்,கால்நடை வளர்ப்பு, வழக்கறிஞர் கள், நீதிபதிகள், சாலைப் பணியாளர்கள், இவர்களெ ல்லாம் எள் கலந்த உணவை சனிக்கிழமைகளில் தானம் தர நன்மை பெருகும்,

ராகு:- இவரின் தானியம் “உளுந்து.” எனவே உளுந்து பருப்பில் செய்த உணவை செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தானம் தர அளப்பரிய நன்மைகள் வந்து சேரும்,

அயல்நாட்டு தொடர்புடைய தொழில், ஏற்றுமதி இறக்குமதித் தொழில், மால் போன்ற மல்ட்டி காம்ப்ளக்ஸ், சூப்பர் மார்க்கெட், IATA என்னும் ஏஜென்சி, இறைச்சி வியாபாரம், தோல் வியாபாரம், தோல் பொருள் உற்பத்தி மற்றும் வியாபாரம் செய்பவர்கள் எல்லோரும் உளுந்து சம்பந்தப்பட்ட உணவை தானம் தர வளமை பெருகும்.

கேது:- இவரின் தானியம் “கொள்ளு.” எனவே கொள்ளு கலந்த உணவை செவ்வாய் மற்றும் சனிக்கிழமைக
ளில் தானம் தர தடைகள் அனைத்தும் நீங்கி நினைத்தது நடக்கும்.

ஆன்மிகம் தொடர்புடைய தொழில், இறை சம்பந்த பட்ட கடை, பூஜை மற்றும் படக்கடை, உபந்யாசம், புரோகிதம், ஆன்மிகச் சுற்றுலா ஏற்பாட்டாளர், கைடு என்னும் வழிகாட்டி, உளவுத்துறை, தூதரகப் பணி, துப்பறிவாளர்கள், கைரேகை நிபுணர், டிடெக்டிவ் ஏஜென்சி, ஜோதிடர்கள் என இவர்களெல்லாம் கொள்ளு உணவை தானம் தர நிம்மதியான வாழ்வும், வளமான வாழ்க்கையும் அமையும்.

Comment here