பொது

கங்குபாய் ஹங்கல் இசைப் பயணம்

கங்குபாய் ஹங்கல் அவர்கள், கர்நாடகாவின் சிறிய நகரங்களில் வாழ்ந்ததால், அவர் பல மோசமான விளைவுகளை சந்தித்தார். அந்த காலக்கட்டத்தில் சமூகத்தில் ஆண்கள் ஆதிக்கத்தால், பெண்கள் அவர்களுடைய விருப்பப்படி எதையும் செய்வதற்கு உரிமை இல்லை, மீறி அவர்களது எண்ணப்படி நடந்து கொண்டால், அவர்களை சமூகத்திலிருந்து ஒதுக்கிவிடுவார்கள். அதே நேரத்தில், கங்குபாய் ஹங்கல் அவர்கள், ஒரு பாடகியாக வேண்டும் என்று ஆசைக் கொண்டு அதில் உறுதியாகவும் இருந்தாலும், சமூகம் அவருக்குத் தடைகளை அளித்து, அவரது எண்ணத்தைத் தடுக்க எண்ணியது. எனினும், ஹங்கல் அவர்கள், எந்தவொரு அடக்குமுறைக்கும் அடங்கிவிடாமல், இந்துஸ்தானி இசைப் பாடகராக தன்னை நிலைநிறுத்த மிகக் கடுமையாகப் போராடினார். 1945 ஆம் ஆண்டு வரை, கங்குபாய் ஹங்கல் அவர்கள், இந்தியா முழுவதும் பல நகரங்களில் காயல், பஜனைகள் மற்றும் தும்ரிக்களைப் பொதுமக்கள் முன் பாடினார். அவரது குரல், வானொலி வலையமைப்பான ‘ஆல் இந்தியா ரேடியோவில்’ வழக்கமாக ஒளிபரப்பாகின. இந்தியாவில் கொண்டாடப்படும் பல்வேறு பண்டிகைகளில் கலந்து கொள்ள வழக்கமாக அவருக்கு அழைப்பு வந்தால், பாட வேண்டுமென்ற எண்ணம் ஹங்கல் அவர்களுக்கு எப்போதும் இருந்தது, அதிலும் குறிப்பாக மும்பையில் நடத்தப்படும் கணேஷுதவாஸ்  கொண்டாட்டங்களில் பாடுவதற்கு, அவர் மிகுந்த ஆர்வம் காட்டினார். பல நிகழ்ச்சிகளுக்குப் பிறகு, கங்குபாய் ஹங்கல் அவர்கள் படிப்படியாக தனது விருப்பத்தை ராகங்களுக்கு மாற்றினார். 1945க்கு பிறகு, அவர் ராகங்களில் மட்டுமே நிகழ்ச்சிகள் அரங்கேற்ற வேண்டுமென்று வலியுறுத்தினார். அவர் கர்நாடக பல்கலைக்கழகத்தின் ‘கெளரவ இசைப் பேராசிரியராக’ நியமிக்கப்பட்ட பிறகும் கூட, பொது கச்சேரிகளிலும் தோன்றினார். அவரது மரணத்திற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தான், அவர் பாடுவதை முழுவதுமாக நிறுத்திக்கொண்டார்.

Comment here