உலகம்

கஞ்சா புகைக்கும் வழக்கம் 2500 ஆண்டுகளுக்கு முன்பே இருந்துள்ளது

சீனா, பாகிஸ்தான், தஜிகிஸ்தான் எல்லையில் உள்ள ஜிர்ஸாங்கல் பகுதியில் 2500 ஆண்டுகளுக்கு முன் உள்ள பழங்காலக் கல்லறையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அங்குள்ள கல்லறைகளில் புதையுண்ட சடலங்களைச் சுற்றி வட்ட வடிவில் கற்கள் சடங்குக்காக நடப்பட்டுள்ளன.

பின் அங்கு, அகழாய்வு மேற்கொண்டபோது சில கோப்பைகளில் கற்களையும், துடிக்கத் துடிக்கக் கொடுமைப்படுத்தி கொல்லப்பட்டு நரபலி கொடுத்தவரின் எலும்புகளையும் போட்டு அதனுள் கஞ்சாவையும் போட்டு புதைத்துள்ளனர்.

இந்த வழக்கம் உயர்மட்டக் குடிகளில் இருந்ததா? அல்லது அனைத்து பிரிவினரும் பங்கேற்ற நிகழ்வா? என ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

கஞ்சா புகைக்கும் வழக்கம் 2500 ஆண்டுகளுக்கு முன் சீன எல்லையில் நடைமுறையில் இருந்து உள்ளது. இதுவரை கண்டறியப்பட்டதிலேயே இதுதான் மிகவும் பழமையானது என சயின்ஸ் அட்வான்ஸ்ட் எனும் ஆய்விதழில் வெளியாகியுள்ளது.

Comment here