பொது

கடலின் உண்மைத் தகவல்கள்

பூமிப்பந்தின் 70 சதவீத இடத்தினை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது இந்த கடல். அதன் பரந்துப்பட்ட இடத்திற்கு ஏற்பவே தன்னுள்ளே பல்வேறு சுவாரஸ்யங்களை புதைத்து வைத்திருக்கிறது. கடல் குறித்து இதுவரை உங்களுக்குத் தெரியாத சில சுவாரஸ்ய்த தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

கடல் டிராகன் : இந்த பூமியில் வாழ்கிற 94 சதவீத உயிரினங்கள் கடல் வாழ் உயிரினங்கள் தான் அவற்றின் மூன்றில் இரண்டு பகுதி உயிரினங்களை நாம் இன்னும் அடையாளம் காணவே இல்லை. தொடர்ந்து கடல் ஆராய்ச்சியாளர்கள் ஒவ்வொன்றாக கண்டுபிடித்து அடையாளப்படுத்துக் கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் ஆஸ்திரேலியாவின் தெற்கு பகுதிக்கடலில் சிவப்பு நிற கடல் வாழ் டிராகனை கண்டுபிடித்திருந்தார்கள்.

கடலுக்குள் ஆறு : ஆழ்கடல் புகைப்படங்களைப் பார்த்தால் கடலுக்குள் ஆறு,குளம் ஆகிய பகுதிகள் தெரியும். இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தக்கூடும். இதுவரையில் பல பகுதிகளிலிருந்து வருகின்ற ஆறு இறுதியாக கடலில் கலக்கிறது என்று தானே படித்திருக்கிறோம். கடலுக்குள் எப்படி ஒரு ஆறு சாத்தியமாகும் என்ற கேள்விக்கு விஞ்ஞானிகள் சொல்கிற பதில் என்ன தெரியுமா? கடலுக்கு அடியில் மிகவும் அடர்த்தியான லேயரில் உப்பு படிந்திருக்கிறது. அப்படி படிந்திருக்கும் உப்பு அதோடு அந்த பகுதியின் கடல் நீர் அதிக அடர்தியாக இருக்கும். இதனால் பார்க்கிற நமக்கு சாதரண நீருக்கும் அதிக அடர்த்தியான நீரும் வேறுபட்டு தெரிவதாக சொல்கிறார்கள்.

Comment here