மாவட்டம்

கடலூரில் 1006 மகளிருக்கு மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனம்.

Rate this post

கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு மகளிர்
மேம்பாட்டு நிறுவனம் சார்பில் உழைக்கும் மகளிருக்கு மானிய விலையில் அம்மா இருசக்கர
வாகனத்தினை 1006 பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர்
வே.ப.தண்டபாணி முன்னிலையில் மாண்புமிகு தொழில்துறை அமைச்சர்
திரு. எம்.சி.சம்பத் அவர்கள்  வழங்கினார்கள்.
இவ்விழாவில் மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் இவ்விழாவில் மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் ல்துறை அமைச்சர் திரு.எம்.சி.சம்பத் திரு.எம்.சி.சம்பத் திரு.எம்.சி.சம்பத் அவர்கள்
தெரிவித்ததா தெரிவித்ததா ரிவித்ததாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சீர்மிகு அறிவிப்பின்
அடிப்படையில் உழைக்கும் மகளிர் பணிக்குச் செல்லும் பயணத்தை எளிதாக்கும் வகையில் 50மூ
மானியம் (அல்லது) ரூ.25000- இதில் எது குறைவோ அத்தொகைக்கான மான்யத்துடன் ‘அம்மா
இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம்” 24.02.2018 அன்று சென்னையில் மாண்புமிகு பாரத
பிரதமர் மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.
இச்சிறப்புமிகு திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டத்தில் பணிக்குச் செல்லும் 3705
உழைக்கும் மகளிருக்கு அம்மா இருசக்கர வாகனம் வழங்க ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.
இதுவரை 200 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு உழைக்கும் மகளிருக்கு மானிய
விலையில் அம்மா இருசக்கர வாகனம் வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட தேர்வு குழுவால் தேர்வு
செய்யப்பட்டுள்ள 1800 பயனாளிகளில் தற்பொழுது இந்நிகழ்வில் 1006 பயனாளிகளுக்கு இன்று
(15.07.2018) ‘அம்மா இருசக்கர வாகனங்கள்” வழங்கப்பட்டுள்ளது.
இதன் அடுத்த கட்டமாக கடலூர் மாவட்ட இலக்கீட்டில் எஞ்சியுள்ள 1705
பயனாளிகளுக்கும் மானியத்துடன் அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்க நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பெண்களின் நலன்காக்கும் அரசு மாண்புமிகு அம்மா அவர்களின் வழியில் நடக்கும்
தமிழ்நாடு அரசாகும். பெண்களின் முன்னேற்றம்தான் நாட்டின் முன்னேற்றம். மகளிர்
முன்னேற்றத்திற்காக தமிழ்நாடு அரசு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
மாண்புமிகு அம்மா அவர்கள் பேருந்து நிலையங்களுக்கு வரும் தாய்மார்கள் தங்களின்

குழந்தைகளுக்கு பால் வழங்குவதற்காக தனி அறை ஒதுக்கி பெண்களின் எண்ணங்களை
புரிந்துகொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளார்கள்.
ஏழை பெண்களுக்கு திருமண நிதி உதவி வழங்கும் திட்டம் கறவை மாடு மற்றும் ஆடுகள்
வழங்கும் திட்டம் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்த்தின் கீழ் நிதியுதவியினை
ரூ.12000-லிருந்து ரூ.18000–மாக உயர்த்தி பல்வேறு திட்டங்களை பெண்களின் நலனுக்காகவே
தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
மகளிர் நலம் போற்றும் தமிழக அரசின் இச்சிறப்பு மிகு திட்டம் கடலூர் மாவட்டத்தில் உரிய
காலத்தில் பயனாளிகளுக்கு சென்றடைய விரைவு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இத்திட்டத்தின் கீழ் உழைக்கும் மகளிர் பணிக்கு செல்ல ஏதுவாக இன்று அம்மா இருசக்கர
வாகனங்களை பெற்றுக்கொண்ட பயனாளிகள் முழுமையாக வாழ்வாதார செயல்களில் ஈடுபட்டு வாழ்வில் சிறப்படைய கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்தார்.
இவ்விழாவிற்கு வருகை புரிந்த அனைவரையும் வரவேற்று மகளிர்
திட்ட இணை இயக்குநர்  திட்ட இயக்குநர் திருமதி. பூ. காஞ்சனா  வரவேற்புரை
நிகழ்த்தினார். இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.கே.விஜயா மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர்கள் திரு.ஜெ.விஜயகுமார் திரு. அ.மோகன்ரவி திரு. ஆர்.கமல்ராஜ், திரு. எஸ்.
இரமேஷ்பாபு, அலுவலர்கள் மற்றும் மகளிர் திட்ட பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இவ்விழாவின் இறுதியில் மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர் திரு. சு. ஆறுமுகம்
அவர்கள் நன்றி கூறினார்.
———————————————————————————————————————————–

Comment here