Sliderஇல்லறம்

கடலூர் திருவந்திபுரம் தேவநாத கோவிலில் இன்று வைகுண்ட ஏகாதேசி

கடலூரை அடுத்து உள்ள திருவந்திபுரத்தில் தேவநாத சாமி கோவில் உள்ளது 108 வைணவ தளங்களில் ஒன்றான இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகா தேசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பது வழக்கம் அதன் படி இன்று வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு அதிகாலை விஸ்வரூப தரிசனமும் தொடர்ந்து மார்கழி மாத பூஜை நடைபெற்றது இதனை தொடர்ந்து காலை 5.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது அப்போது சொர்க்கவாசல் வழியாக நாச்சியார்களுடன் தேவநாத சாமியும் எழந்து அருள் பாலித்தனர் பின்னர் தேசிகர் எதிர் சேவையும் வெளிபிராகாரம் தேவநாதசாமி வலம் வந்து பக்தர்களுக்கு தரிசனம் வழங்கினர் இதில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

Comment here