மாவட்டம்

கடலூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை.

Rate this post

கடலூர் வேணுகோபாலபுரம் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்
பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாளை கொண்டாடும் வகையில்
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வே.ப.தண்டபாணி பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினாhர்.

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் சூலை 15 ஆம் நாள் பெருந்தலைவர்
காமராஜர் அவர்களின் பிறந்தநாள் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டு
வருகிறது. அதன் பேரில் கடலூர் மாவட்டத்தில் வேணுகோபாலபுரம் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வே.ப.தண்டபாணி பெருந்தலைவர்
காமராஜர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி
மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வே.ப.தண்டபாணி
தெரிவித்ததாவது.
கல்வி தான் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் வழிவகை
செய்கிறது. உலக அளவில் நாட்டின் முன்னேற்றத்திற்கு கல்வி தான் முக்கிய
பங்காக திகழ்கிறது. கர்மவீரர் காமராஜர் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவராவர்.
மிகப்பெரிய அரசியல் தலைவர்களை உருவாக்கியவர் பெருந்தலைவர் காமராஜர்.
தமிழ்நாட்டில் உள்ள நீர்பாசன திட்டங்களை பெருந்தலைவர் காமராஜர் மாண்புமிகு முதலமைச்சராக இருந்தபோது கொண்டு வந்த திட்டங்களாகும். எதிர்காலத்தை உருவாக்கக்கூடியவர்கள் உங்களைப் போன்ற இளைஞர்கள் தான். சர்வதேச அளவில் ஆங்கிலம் மொழி ஒரு இணைப்பு மொழியாக உள்ளது. எனவே நீங்கள் நன்கு படித்து எதிர்காலத்தில்
நல்ல ஒரு வேலைவாய்ப்பினை பெரும்போது தங்களது தாய்மொழியினை மட்டும்
தெரிந்து கொள்ளாமல் ஆங்கிலம் இந்தி மற்றும் பிற மாநிலங்களின் மொழியினை
நன்கு தெரிந்து வைத்து கொள்ள வேண்டும். மேலும் கல்வி கற்றலின் பருவம்
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். கல்வி கற்கும்போது அனைத்தையும்
நன்கு தெரிந்து கொண்டு தங்களின் அறிவாற்றலுக்கு ஏற்ப நல்லதொரு
வேலைவாய்ப்பினை பெற்று வாழ்வில் வாழ்வாங்கு வாழ வேண்டுமென
வாழ்த்துகிறேன் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்
திரு.ஆர்.முருகன் வேணுகோபாலபுரம் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி
தலைமையாசிரியர் திரு.லியோனாட்ஜானி உதவி தலைமை ஆசிரியர் திரு.மணி
மற்றும் ஆசிரிய பெருமக்கள் மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Comment here