மாவட்டம்

கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்

Rate this post

கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வெ.அன்புச்செல்வன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (11.02.2019) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் நேரில் அளித்தன.

இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மொத்தம் 306 மனுக்கள் வரப்பெற்றன. பொதுமக்கள் அளித்த இம்மனுக்களை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், விதிமுறைகளுக்குட்பட்டும் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டும் மனுதாரருக்கு தீர்வு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது காலம் தாழ்த்தாமல் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு தெளிவான பதிலை அளிக்கவேண்டும் எனவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் ஒரு பயனாளிக்கு ரூ.3,573- மதிப்பிலான தையல் இயந்திரத்தினையும், ஒரு பயனாளிக்கு ரூ.5,018- மதிப்பிலான சலவை பெட்டியினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வெ.அன்புச்செல்வன், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.

இக்குறை தீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ஆர்.ராஜகிருபாகரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி.சந்தோஷினி சந்திரா, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) திரு.எஸ்.பரிமளம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் திரு.பானுகோபன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலா; திருமதி. ராஜஸ்ரீ, மாவட்ட வழங்கல் அலுவலர், திரு.வெற்றிவேல், மாவட்ட மாற்றத்திறனாளிகள் நல அலுவலர் திரு.சீனிவாசன், மாவட்ட மேலாளர் (தாட்கோ) திருமதி.ராஜலட்சுமி, ஆகியோர் உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Comment here