மாவட்டம்

கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்

கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ஆர்.இராஜகிருபாகரன் அவர்கள் தலைமையில் இன்று (18.02.2019) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு கோhpக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் மாவட்ட வருவாய் அலுவலர் அவா;களிடம் நோpல் அளித்தனர்.

இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மொத்தம் 458 மனுக்கள் வரப்பெற்றன. பொதுமக்கள் அளித்த இம்மனுக்களை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், விதிமுறைகளுக்குட்பட்டும் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டும் மனுதாரருக்கு தீர்வு வழங்க வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது காலம் தாழ்த்தாமல் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு தெளிவான பதிலை அளிக்கவேண்டும் எனவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ளும் மீம்ஸ் உருவாக்கும் போட்டி மாநில அளவில் நடைபெற்றது. புகைப்படங்களில் ஏதேனும் கருத்துகள் இடம் பெறச் செய்வது மீம்ஸ் என்று அழைக்கப்படுகிறது. விழிப்புணர்வு பதிவுகளாக சமூக வலைதளங்களில் மீம்ஸ் ஆக்கிரமித்துள்ளது. இத்தாக்கத்தின் வெளிப்பாடாக எச்.ஐ.விஃஎய்ட்ஸ் விழிப்புணர்வுக்காக மீம்ஸ் உருவாக்கும் போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியானது 01.10.2018 முதல் 15.12.2018 வரை பல்கலைக்கழகம், கல்லூரி, பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு இணையதளத்தின் வாயிலாக நடைபெற்றது. இதில் 1165 மீம்ஸ் (புகைப்படங்களில் மூலம் கருத்துகளை பகிர்தல்) புகைப்படங்கள் வரப்பெற்றது. இதில் 100 மீம்ஸ் புகைப்படங்கள்

தேர்தெடுக்கப்பட்டது. இப்போட்டியில் கடலூர் மாவட்டத்தில் மொத்தம் நான்கு நபர்கள் வெற்றி பெற்றுள்ளனர். ஆகவே அவர்களை சிறப்பு செய்யும் பொருட்டு மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ஆர்.இராஜகிருபாகரன் அவர்கள் பாராட்டுச் சான்றிதழ் வெற்றி பெற்ற நபர்களுக்கு வழங்கினார்.

மேலும், கடலூர் மாவட்டம், ஒருங்கிணைந்த கல்வி சார்பில் பெண் கல்வியின் முக்கியத்துவம், இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் மற்றும் சுத்தம் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வை அரசு பள்ளி மாணவர்களிடையே ஏற்படுத்தும் நோக்கத்தில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பேச்சு போட்டி, ஓவியப்போட்டி மற்றும் கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளது. இதன்படி பள்ளி அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வட்டார அளவிலும், வட்டார அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான போட்டிகள் புனித வளனார் மேல்நிலைப்பள்ளி மஞ்சக்குப்பத்தில் இன்று நடத்தப்பட்டது. இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுத் தொகையினை மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ஆர்.இராஜகிருபாகரன் அவர்கள் வழங்கினார்.

மேலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் வங்கி கடன் மான்யம் ஒரு நபருக்கு ரூ.10,000 வீதம் 14 பயனாளிகளுக்கு ரூ.1,40,000 மதிப்பீட்டிலும்;, உதவி உபகரணத்தில் மூன்று சக்கர சைக்கிள் ஒரு நபருக்கு ரூ.7500ஃ- வீதம் 3 பயனாளிகளுக்கு ரூ.22,500 மதிப்பீட்டிலும்; மற்றும் சக்கர நாற்காலி ஒரு பயனாளிக்கு ரூ.6500 மதிப்பீட்டிலும்; மொத்தம் 18 பயனாளிகளுக்கு ரூ.1,69,000ஃ- மதிப்பீட்டிலும் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ஆர்.இராஜகிருபாகரன் அவர்கள் வழங்கினார்.
இக்குறை தீர்வு நாள் கூட்டத்தில் தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) திரு.எஸ்.பரிமளம், மாவட்ட மாற்றத்திறனாளிகள் நல அலுவலர் திரு.சீனிவாசன், மாவட்ட மேலாளர் (தாட்கோ) திருமதி.ராஜலட்சுமி, ஆகியோர் உட்பட அனைத்துத்துறை அலுவலர;கள் கலந்து கொண்டனர்.

Comment here