/ மாவட்டம் / கடலூர் மாவட்ட காவல் வாகன ஓட்டுநர்களுக்கான போக்குவரத்து விதிமுறை விழிப்புணர்வு முகாம்.

கடலூர் மாவட்ட காவல் வாகன ஓட்டுநர்களுக்கான போக்குவரத்து விதிமுறை விழிப்புணர்வு முகாம்.

tamilmalar on 12/01/2018 - 10:58 PM in மாவட்டம்
5 (100%) 1 vote

 

கடலூர் மாவட்ட காவல் வாகன ஓட்டுநர்களுக்கான போக்குவரத்து விதிமுறை விழிப்புணர்வு முகாம் இன்று 12.1. 2018 -ம் தேதி SR J காவலர் திருமண மண்டபத்தில் கடலூர் காவல் கண்காணிப்பாளர்
திரு C விஜயகுமார் IPS அவர்கள் துவக்கி வைத்து அறிவுரைகள் வழங்கினார்கள்
கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் திரு மணி
அவர்கள் வாகன
ஓட்டுநர்கள் முதலில் கவனத்தில் கொள்ள
வேண்டியவை
I.வாகனத்தின் தன்மை

2 வாகன ஓட்டுநரின் உடல் தகுதி

3 பயணம் செய்யும் சாலையின் தன்மை
இவற்றை கணிக்கும் ஆற்றல் பெற்றிருக்க வேண்டும்

பெரும்பாலான விபத்துக்கள் முந்திசெல்வதால்
(over take ) தான் ஏற்படுகிறது அதனால் எதிரில் வரும் வாகனத்தின் வேகத்தை கணிக்கும் ஆற்றல் பெற்றிருக்க வேண்டும்

மேலும் போக்குவரத்து சாலைகளில் திடீர் என ஆடு, மாடு, நாய் போன்ற விலங்கினங்கள் குறுக்கீடு செய்வதால் அதனையும் கணித்து விவேகத்துடன் செயல்பட வேண்டும் எனவும்,

முக்கியமாக மிதமான வேகம் விபத்தை முற்றிலுமாக குறைக்கலாம் எனவும்
இரு சக்கர வாகன ஓட்டிகள் தரமான ஹெல்மெட் அணிய வேண்டும்
வாகனத்தின் காற்றின் அளவு, பிரேக் இவைகளை சரியாக வைத்திருக்க வேண்டும் போன்ற
ஆலோசனை வழங்கினார்கள்

இந்நிகழ்ச்சியில் கடலூர் துணை காவல் கண்காணிப்பாளர்
திரு நரசிம்மன் ,
வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள்
திரு சக்திவேல்,
திரு வேலுமணி
ஆயுதப்படை ஆய்வாளர்
திரு சிவசங்கரன்
ஆயுதப் படை வாகன பிரிவு உதவி ஆய்வாளர்
திரு அமர்நாத்
போக்குவரத்து பிரிவு உதவி ஆய்வாளர்கள் திரு சிவக்குமார்
திரு அருணாசலம்
திரு சக்திவேல் மற்றும் கடலூர் மாவட்ட காவல் வாகன ஓட்டுநர்கள் கலந்து கொண்டார்கள்

0 POST COMMENT
Rate this article
5 (100%) 1 vote

Send Us A Message Here

Your email address will not be published. Required fields are marked *