பொது

கடல் உறைந்து பனிக்கட்டியான அதிசய சம்பவம்

சீனாவில் நிலவிவரும் கடும்பனி காரணமாக கடல் உறைந்து பனிக்கட்டியான அதிசய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

உலகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் பனிக்காலம் வாட்டி வதைத்து வருகிறது. சீனாவிலும் பெரும்பாலான பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதன் காரணமாக ஜியுஹூவா தீவின் கடல் பகுதி முற்றிலுமாக உறைந்து போயுள்ளது.

சிங்செங்க் மாகாணத்தின் அருகேயுள்ள, லியாவோடாங் வளைகுடா பகுதியில், கிட்டத்தட்ட 130 கி.மீட்டர் சுற்றளவுக்கு கடல் பகுதி பனிக்கட்டியால் சூழப்பட்டுள்ளது.. இதன் காரணமாக ஜியுஹூவா தீவில் வசிக்கும் 3000பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

சுமார் ஒரு அடி உயரத்திற்கு கடல் நீர் உறைந்துள்ளதால், கடல் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த படகுகளும், சிறிய ரக கப்பல்களும் உறைபனியில் சிக்கியுள்ளதாக இங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

Comment here