பொது

கடல் கன்னி

பறக்கும் தட்டு இருக்க இல்லையா, ஏலியன் இருக்க இல்லையான்னு நமக்கு தெரியாத அல்லது நம்மால் நிரூபிக்க முடியாத பல விசயங்களைப்பற்றி தான் .அதுபோல கடல் கன்னியும் ஒரு நிரூபிக்க முடியாத விஷயம்.   கடல் கன்னியைப் பற்றிய கதை மற்றும் ஓவியங்கள் உலகம் முழுதும் இருந்தாலும் முதன் முதலில் பண்டைய ஆஸ்ரியாவில் தான் தோன்றியது. ஆம், கடவுளின் மறுவுருவமாக கருதப்பட்ட அடர்கரிஸ் எனும் பெண் தனது காதலனை தெரியாமல் கொலை செய்துவிட்டதாகவும் அதற்கு தமக்கு தானே தண்டனை கொடுக்கும் விதமாக குளத்தில் குதித்ததாகவும் , பிறகு உடலின் கீழ் பகுதி மட்டும் மீன் போன்ற அமைப்பாக மாறியதாகவும் குறிப்புகள் உள்ளன.   என்னதான் உலக நாடுகளின் பல பகுதிகளில் பலர் கடல் கன்னியை நேரில் பார்த்ததாக தெரிவித்தாலும் இன்னும் சரியான ஆதாரம் கிடைவில்லை எனவே கூறலாம்.   எனினும் கடல் கன்னியை நேரில் பார்த்தவர்களையும் அவர்கள் வைத்துள்ள சான்றுகளையும் தொகுத்து வழங்குகிறது மௌவல் டாப் டென் . இதைப் பார்த்த பின்பு நீங்களே முடிவு செய்யுங்கள் கடல் கன்னி இருக்கா  இல்லையா என்று.

Comment here