ஆயுர்வேதம்

கடும் வெப்பத்தை சமாளிக்க உதவும் கற்றாழைச் சாறு!

சுட்டெரிக்கும் வெயில் காலத்தில் வெப்ப நிலை அதிகமாக இருப்பதால் உடலில் இருந்து வியர்வை மூலம் நீர்போக்கு அதிகமாக இருக்கும். அதிகமான நீர்போக்கினால் உடல் சோர்வு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். மேலும் உடலில் போதுமான நீர் இல்லாமல் போவதால் மயக்கம், அஜீரனம், மற்றும் சரும பிரச்சனைகள் வரக்கூடும். இதைத் தடுக்க நீர் மற்றும் சரியான உணவுகள் அருந்துவது அவசியம். இந்நிலையில் உடல் வெப்பத்தை தணிக்கும் வகையிலான கற்றாழைச் சாறை ஆர்வத்துடன் பொதுமக்கள் பருகி வருவதால் திருவள்ளூர் பகுதியில் அதன் விற்பனையும் சூடிபிடிக்கத் தொடங்கியுள்ளன.

ஒவ்வொரு கோடைக்கால வெயிலின் தாக்கத்தால் உடலின் வெப்பம் அதிகரிக்கும். இந்த வெப்பத்தின் தாக்கத்தைத் தணித்து உடல் நலனைப் பாதுகாக்க பொதுமக்கள் தானிய கூழ் வகைகள், இளநீர் வகைகள், தர்பூசணி, வெள்ளரி மற்றும் குளிர்பானங்கள் உள்ளிட்டவற்றைப் பருகுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், உடல் வெப்பத்தை சீராக வைத்திருக்கும் கற்றாழை சாறு விற்பனை திருவள்ளூர் பகுதியில் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக திருவள்ளூரில் பெரியகுப்பம், காக்களூர் சாலை, ஆட்சியர் அலுவலக சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலையோரத்தில் தள்ளுவண்டிகளில் இயற்கை மூலிகையான கற்றாழை சாறு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதை பொதுமக்கள் ஒரு கப் ரூ. 20 -க்கு வாங்கி ஆர்வமாகப் பருகி வருகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்களிடம் விசாரித்த போது, கற்றாழையில் விட்டமின் சி, அமினோஅமிலம் உள்ளது. நுண்கிருமி நாசினியாகவும் செயல்படும் கற்றாழை மடலின் உள்பகுதி ஜெல் போன்று இருக்கும். இரண்டு அங்குல அளவு எடுத்து நீரில் ஏழு எட்டு முறை கழுவிவிட்டு சாப்பிட்டால் தீராத வயிற்றுவலி நீங்கும். அத்துடன், உடல் சூடு, சர்க்கரை நோய், ரத்தத்தை சுத்தப்படுத்துதல், ஞாபக சக்தி, கண் எரிச்சல், நரம்பு தளர்ச்சி, வயிற்று வலி போன்றவற்றை நீக்கும் தன்மையுடையது. இதுபோன்ற காரணங்களால் கற்றாழை சாறை ஆர்வத்துடன் வாங்கி அருந்துவதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து பெரியகுப்பம் பகுதியில் தள்ளுவண்டியில் கற்றாழை சாறு விற்பனை செய்யும் திருத்தணியைச் சேர்ந்த சீனிவாசன் (40) கூறுகையில், இந்த கற்றாழை சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, மதுரை , தேனி போன்ற பல்வேறு பகுதிகளில் உற்பத்தி செய்யப்படுகிறது. அங்கிருந்து மொத்த வியாபாரிகள் மூலம் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். இதை ஒரு கட்டு ரூ. 50-க்கு வாங்கி வந்து நீரில் சுத்தப்படுத்தி, தோளை அகற்றினால் 1 கிலோ ஜெல் கிடைக்கும். இத்துடன் மோர், உப்பு மற்றும் திரிசூரணம் என்ற சீரகத் தூள், தான்றிக்காய் வத்தல், கடுக்காய் பொடி ஆகியவற்ரை ஜெல்லுடன் மிக்ஸியில் அரைத்து, சாறை சுவையாகக் கொடுப்போம். அதனால் இதனை வாங்கிப் பருகுவதற்கு பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து செல்கின்றனர்.

இதேபோல், ஒரு கட்டுக்கு 20 கப் வரையில் தயார் செய்ய முடியும். இந்த விற்பனையை காலையிலேயே தொடங்கி விடுவோம். நடைபயிற்சி முடித்து வருவோர் ஆர்வத்துடன் வாங்கிப் பருகுவதால் விற்பனையும் அமோகமாக இருக்கும். இதேபோல், நாள்தோறும் 6 கட்டு முதல் 8 கட்டுகள் என ரூ.1,800 முதல் ரூ. 2,100 வரையில் விற்பனையாகும். இதில் மூலப்பொருள்கள் செலவு, கூலிக்கு போக ரூ. 800 வரையில் கிடைக்கும் என்றார்.

ஆனாலும் கொழகொழவென இருப்பதால் சிலர் இதைப் பயன்படுத்தத் தயங்குவார்கள். இதன் கசப்புச் சுவைக்காக ஒதுக்கி வைப்பவரும் உண்டு. ஆனால், இதன் மருத்துவப் பலன்கள் அமோகம். வெளி மருந்தாகவும் உள்மருந்தாகவும் அற்புதம் செய்யும் சஞ்சீவ மூலிகை கற்றாழை.

கற்றாழையில் ஆன்டிஆக்ஸிடன்ட், ஆன்டிபயாடிக் நிறைந்துள்ளன. கால்சியம், சோடியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், மாங்கனீஸ், ஜின்க், ஃபோலிக் அமிலம், வைட்டமின் ஏ, பி1, பி2, பி6, சி, இ உள்ளன. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவுகிறது.

2 செல் வளர்ச்சிக்கு உதவிபுரிகிறது. காயம், தழும்பு, வலிகள் குணமாகின்றன. இதில் உள்ள சதைப்பகுதியை உட்கொள்வதால், அல்சர், புற்றுநோய், தொற்று நோய்கள், கீமோதெரப்பியின் பக்கவிளைவுகள் கட்டுப்படும்.

3 கற்றாழைச் சாற்றைத் தினமும் காலையில் ஒரு கிளாஸ் மோருடன் கலந்து உட்கொண்டுவந்தால், கர்ப்பப்பை நோய்கள் வராமல் தடுக்கலாம், பிரச்னையும் குணமாகும்.

4 வயிற்றில் நல்ல பாக்டீரியாவை உருவாக்கி, செரிமான செயல்பாட்டைச் சீராக்கும். இர்ரிட்டபிள் பவுல் சிண்ட்ரோம் என்கிற உணவு உண்டதும் மலம் கழிக்கும் உணர்வு ஏற்படும் பிரச்னை தீரும்.

5 மூட்டு வீக்கம், மூட்டு இறுகுதல், மூட்டு பலவீனம் குணமாகும். வலி குறையும்.

6 ஆசிட் ரிஃப்லெக்ஸ் என்று சொல்லக்கூடிய உணவுக்குழாயில் அமிலம் வெளியேறி, உணவுக்குழாயில் புண் ஏற்படும் பிரச்னைக்கு முற்றுப்புள்ளிவைக்க கற்றாழைச் சாறு உதவுகிறது. நெஞ்சு எரிச்சல் குறையும். வயிற்றுப் புண்கள் வராமல் தடுக்கும். சிறந்த மலமிலக்கியாகச் செயல்படும்.

7 நல்ல கொழுப்பை உடலில் சேர உதவும். ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கும்.

8 இதில் உள்ள வைட்டமின் சி, சளி, இருமல், மூக்கு அடைப்பு, சுவாசக் கோளாறுகளை நீக்கும்.

9 சருமம், முகத்தில் இதன் சாற்றைப் பூசிவர தழும்புகள், கரும்புள்ளிகள், பருக்கள் இன்றி சீரான, அழகான சருமம் கிடைக்கும். மூப்படைதலைத் தாமதப்படுத்தும்.

வெப்பத்தின் தாக்கம் எவ்வளவு இருந்தாலும் சரி, தினசரி பழக்கத்தில் முக்கியமான ஒன்று குடிநீர். நீர்ப்போக்கை சமாளிக்க நிறைய குடிநீர் குடிப்பது அவசியமான ஒன்று. எங்குச் சென்றாலும் குடிநீர் கையில் வைத்துக்கொள்வது அவசியம். எவ்வளவு தண்ணீர் அருந்துகிறோமோ உடல் நிலை அவ்வளவு சீறாக இருக்கும். ஏனெனில் ஒருவருக்கு அதிகமாக வியர்க்கும் வேலையில் அவருக்கு உடலில் இருந்து நீர் குறைவதோடு மட்டுமல்லாமல் உடலில் உள்ள எலெக்டரோலைட்ஸ், சோடியாம் மற்றும் பொடாசியம் அளவும் குறையக் கூடும். இதை தவிர்க்க இளநீர் பருகலாம். இளநீரில் அதிக அளவு பொடாசியம் உள்ளது. எலுமிச்சை ஜூஸ் அருந்துகையில் வைட்டமின் ஸி உடல் சத்துக்கு உதவும். இது மட்டுமின்றி புதினா, துளசி, பெர்ரி பழங்கள் கொண்டும் ஜூஸ் தயாரித்து குடிக்கலாம். இவற்றில் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளதால் வெயில் காலத்தில் ஏற்படும் சிறுநீர் பாதை நோய் (Urinary tract infection) கட்டுக்குள் கொண்டு வர இயலும். நீர்மோர் சுலபமாக தயாரிக்கலாம். நீர்மோரில் ப்ரோபயாடிக்ஸ் உள்ளதால் உடல்வெப்பநிலையை சமமாக வைத்துக்கொள்ளும்.அதையொட்டி. இந்த வெப்பத்தின் தாக்கத்தைத் தணித்து உடல் நலனைப் பாதுகாக்க பொதுமக்கள் தானிய கூழ் வகைகள், இளநீர் வகைகள், தர்பூசணி, வெள்ளரி மற்றும் குளிர்பானங்கள் உள்ளிட்டவற்றைப் பருகுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் கற்றாழைச் சாறு விற்பனை திருவள்ளூர் பகுதியில் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளதான் விசேஷம்

Comment here