உலகம்

கட்டிடத்தின் மீது மோதி விமானம் தீப்பிடித்து 10 பேர் உயிரிழப்பு

நியூயார்க்,

டெக்சாஸ் மாகாணம் டல்லாஸ் நகரில் உள்ள விமான நிலையத்தில் இருந்து புளோரிடாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான சிறிய ரக விமானம் புறப்பட்டது. விமானத்தில் 8 பயணிகளும், 2 விமானிகளும் இருந்தனர். விமானம் ஓடுபாதையில் இருந்து புறப்பட்டு, மேல் நோக்கி பறக்க முற்பட்ட போது திடீரென என்ஜின் பழுதானது. இதனையடுத்து தரையில் இருந்து 200 அடி உயரத்துக்கு எழுந்த விமானத்தால் பறக்கமுடியவில்லை, அங்கே திணறியது.

இதனையடுத்து விமானிகள் விமானத்தை பத்திரமாக தரையிறக்க முயற்சித்தனர். ஆனால் கட்டுப்பாட்டை இழந்த விமானம் அங்குள்ள ஒரு கட்டிடத்தின் மீது மோதியது. இதில் விமானம் தீப்பிடித்து எரிந்தது. இந்த கோர விபத்தில் விமானத்தில் இருந்த 10 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிர் இழந்தனர். இந்த விபத்து குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Comment here