கதை

கண்ணகி கோவில்

கண்ணகியின் முடிவு சில நாட்களுக்கு பிறகு வானில் தோன்றிய வெளிச்சத்தில் இருந்து இறங்கி வந்த கோவலன் கண்ணகியை தன்னுடன் தேவர்கள் உலகத்திற்கு அழைத்துச்சென்று விட்டார். பூமியில் வாழமுடியாத மகிழ்ச்சியான வாழ்வு தேவர்கள் உலகத்தில் கண்ணகிக்கு கிடைத்தது. இதனை பார்த்து ஆச்சரியமடைந்த மக்கள் அந்நாட்டின் அரசன் சேரன் செங்குட்டவனிடம் இந்த அதிசயத்தை கூறினர். இதனை கேட்டு பரவசமடைந்த சேரன் செங்குட்டுவன் அதே இடத்தில் கண்ணகிக்கு ஒரு கோவிலை கட்டினார். கண்ணகிக்கு கோவில் கண்ணகி கோவலனுடன் வானுலகிற்கு சென்ற இடத்தில கட்டப்பட்டதுதான் மங்களா தேவி கண்ணகி கோவில். இப்போதும் தமிழக-கேரள எல்லையான இடுக்கி மாவட்டத்தில் இந்த கோவில் உள்ளது. கண்ணகிக்கு அவர் ஆசைப்பட்ட வாழ்க்கை இங்கிருந்து கிடைத்ததால் இங்கே வேண்டிக்கொள்ளும் அனைத்தும் நிறைவேறும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. கண்ணகி நடந்து வந்த பாதையாக கருதப்படும் ஒரு ஒற்றையடி பாதை 6கிமீ தூரத்திற்கு இங்கே உள்ளது. இன்றும் பக்தர்கள் சின்ஹா பாதை வழியாக சென்றுதான் கண்ணகியை தரிசிக்கின்றனர். வருடம்தோறும் சித்ராபௌர்ணமி அன்று மட்டுமே பக்தர்கள் இந்த கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

Comment here